/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : அக் 16, 2024 04:37 AM
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் கிரிவல ரோடு, ரத வீதிகளில் தற்காலிக மற்றும் கட்டட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று துவங்கியது.
கலெக்டர் சங்கீதா சில தினங்களுக்கு முன் சரவணப் பொய்கையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பரங்குன்றத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி நேற்று மாநகராட்சி உதவி கமிஷனர் ராதா தலைமையில் பணியாளர்கள், மண் அள்ளும் இயந்திரம் மூலம் கோயில் வாசல் முதல் அவனியாபுரம் பிரிவு வரை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இன்றும் அகற்றப்பட உள்ளது என மாநகராட்சியினர் தெரிவித்தனர். இதனை அறிந்த பலர் தங்களது கடைகள், வீடுகளின் உரிமையாளர்கள் வீடுகளில் மேற்பகுதியில் இருந்த தகரங்கள், கூரைகளை தாங்களாவே அகற்றிக் கொண்டனர்.