/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீக்கப்பட்ட சகுந்தலா மீண்டும் உசிலை நகர தலைவரானார்
/
நீக்கப்பட்ட சகுந்தலா மீண்டும் உசிலை நகர தலைவரானார்
நீக்கப்பட்ட சகுந்தலா மீண்டும் உசிலை நகர தலைவரானார்
நீக்கப்பட்ட சகுந்தலா மீண்டும் உசிலை நகர தலைவரானார்
ADDED : செப் 17, 2025 03:23 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சித் தலைவரான சகுந்தலா, 11வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக இருந்தவர். நகராட்சி தலைவர் பதவிக்கு, தி.மு.க., தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டு தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். பின்னர் அ.தி.மு.க., வில் ஐக்கியமானார்.
கடந்த மார்ச்சில் அவரை அரசு தகுதி நீக்கம் செய்தது. இதுதொடர்பான வழக்கில் தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்து ஆக. 26ல், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி செப்.4ல் மீண்டும்பதவியேற்க வந்த சகுந்தலாவை, நகராட்சி கமிஷனர் இளவரசன் அனுமதிக்கவில்லை. இதனால் சகுந்தலா தர்ணாவில் ஈடுபட்டார். மீண்டும் நீதிமன்றம் சென்று கவுன்சிலராகவும், தலைவராகவும் நீடிக்கலாம் என்று உத்தரவு பெற்றார்.
நேற்று காலை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில் மீண்டும் பொறுப்பேற்றார்.
அ.தி.மு.க., செயலாளர் பூமாராஜா தலைமையில் கவுன்சிலர்கள் பொன்பாண்டியம்மாள், கலா, தேவசேனா, பிரகதீஸ்வரன், ராமகிருஷ்ணன், மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜன், வக்கீல் சங்கிலி ஆகியோர் உடனிருந்தனர்.