ADDED : ஜூன் 27, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக கோயில் முன்பு சன்னதி தெருவிலுள்ள 16 கால் மண்டபத்தில் மராமத்து பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது.
கல் துாண்கள் முழுவதும் 'வாட்டர் வாஷ்' பணி முடிக்கப்பட்டு மேல் பகுதியில் ஓடுகள் பதிக்கும் பணியும், முகப்புகளில் அலங்காரப் பணிகளும் நடக்கிறது.