ADDED : ஜன 27, 2025 05:49 AM

மதுரை : மதுரை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொது அமைப்புகள் சார்பில் 76வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அரசு அலுவலகங்கள்
மதுரை மாநகராட்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த் கொடியேற்றினார். கமிஷனர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வென்ற மாணவர்கள், சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் சரண்யா, சாந்தி ரேவந்த், பொறியாளர் தியாகராஜன், உதவி கமிஷனர் ராதா, கண்காணிப்பாளர் ஜார்ஜ் ஆலிவர் லாரன்ஸ், சுகாதார அலுவலர் செல்வக்குமார், கணக்கு பிரிவு அலுவலர் பாலாஜி, கமிஷனர் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், பி.ஆர்.ஓ., அலுவலக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சரவணன், மருந்தாளுநர் கண்மணி, வெள்ளி வீதியார் பள்ளி ஆசிரியர் அய்யர் உட்பட 210 பேருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினர்.
மேயர் பேசுகையில், ''மாநகராட்சி பகுதியில் மூன்று ஆண்டுகளில் ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன'' என்றார். மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிசெல்வி, துணைகமிஷனர் சிவக்குமார், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி கமிஷனர்கள் அருணாசலம், மாரியப்பன், வெங்கட்ரமணன், கோபு, சாந்தி, ராதா, நகர்நல அலுவலர் இந்திரா, உதவி நகர்நல அலுவலர் அபிே ஷக் பங்கேற்றனர்.
மதுரை அரசு போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகத்தில் மேலாண் இயக்குனர் சிங்காரவேலு கொடியேற்றினார். பொதுமேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மணி, உதவி மேலாளர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை சி.இ.ஓ., அலுவலகத்தில் தனியார் பள்ளி டி.இ.ஓ., சுதாகர் கொடியேற்றினார். டி.இ.ஓ., நேர்முக உதவியாளர் கந்தசாமி,சுப்பிரமணியன், முருகபூபதி, கண்காணிப்பாளர்கள் அண்ணாமலைராஜன், டேவிட், திருஞானம், சரவணன், அலுவலர்கள்பங்கேற்றனர்.
மதுரை நகர் காங்., அலுவலகத்தில் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் செய்யதுபாபு, பாலு, காமராஜ், கவுன்சிலர் முருகன், மகளிர் அணி நிர்வாகி ஷானவாஸ் பேகம் பங்கேற்றனர். மதுரை மாநகராட்சி 58 வது வார்டு பூங்காநகரில் தி.மு.க., கவுன்சிலர் ஜெயராம் தலைமையில் கொடியேற்றினர்.
* மதுரை ரயில்வே காலனியில் கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா கொடி ஏற்றினார். கூடுதல் கோட்ட மேலாளர் ராவ், ஊழியர் நல அதிகாரி சங்கரன், ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் சிவதாஸ், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆர்.பி.எப்., சார்பில் அணிவகுப்பு நடந்தது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிர்வாக நீதிபதி ரமேஷ் கொடியேற்றினார்.
சி.ஐ.எஸ்.எப்., வீரர்களின் அணிவகுப்பு, ரத்த தான முகாம் நடந்தன. மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி சிவகடாட்சம் கொடியேற்றினார். தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் கொடியேற்றினார். கூடுதல் மாவட்ட அலுவலர் முருகன், நிலைய அலுவலர் அசோக் குமார் பங்கேற்றனர்.
கல்வி நிறுவனங்கள்
* மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் முதல்வர் சூர்யபிரபா கொடியேற்றி பேசினார். மாணவர்களின்தேச பக்தி நிகழ்ச்சிகள் நடந்தன. ஒற்றுமை, ஜனநாயகம், முன்னேற்றம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் முதல்வர் சுஜாதா கொடியேற்றி பேசினார். மாணவர்கள் கலை நிகழச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி துறை இயக்குநர் பாண்டியராஜன் ஏற்பாடு செய்தார்.
மதுரை காமராஜ் பல்கலையில் பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் கொடியேற்றினார். தேர்வாணையர் முத்தையா,டீன் கண்ணதாசன், துறைத் தலைவர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். பள்ளி, கல்லுாரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை கொடியேற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சற்குணராதா, பிடிஏ தலைவர் சவுந்தர், ஆசிரியர்கள் நாகேஸ்வரி, விஜயசாரதி, ஜெயலட்சுமி,ரமேஷ் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை கல்லுாரி மேல்நிலைப் பள்ளியில் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாலாஜிராம் வரவேற்றார். டாப் கிட்ஸ் நிறுவனர் தீப் கொடியேற்றினார். ஆசிரியர்கள் வெங்கடசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். பீ.பி.குளம் முல்லைநகர் தனபால் மேல்நிலை பள்ளியில் தாளாளர் தனபால் ஜெயராஜ் கொடியேற்றி பேசினார்.தலைமையாசிரியர் தினேஷ் சேவியர் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் மாசில் ஆனந்தி, வெள்ளைத்தாய் பங்கேற்றனர். பெருங்குடி அமுதம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் முதல்வர் ஜெயஷீலா தலைமையில் கொண்டாடப்பட்டது. துணைமுதல்வர்ஸ்டெல்லா ஜெயமணி முன்னிலை வகித்தார். ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களின் விழிப்புணர்வுஊர்வலம் நடந்தது.
மதுரைச சம்மட்டிபுரம் பிள்ளைமார் சங்க மேல்நிலைப் பள்ளியில் நிர்வாகக் குழுத் தலைவர் சண்முகவேல் கொடியேற்றினார். செயலாளர் முருகன், தலைமை ஆசிரியை ரம்யாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மதுரை காமராஜர் பல்கலை கல்லுாரியில் முதல்வர் புவனேஸ்வரன் கொடி ஏற்றினார். பேராசிரியர் மணி, உடற்கல்வி ஆசிரியர் மதன், துணை முதல்வர் கபிலன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசு சட்டக் கல்லுாரியில் முதல்வர் குமரன் கொடியேற்றி சிறப்புரைத்தார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் குபேந்திரன், ஆனந்தன், செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முகமது ரபி செய்தனர். பொன்னகரம் எம்.எல்.டபுள்யூ.ஏ., பள்ளியில் மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் மணிகண்டன் கொடியேற்றினார். உதவி தலைமை ஆசிரியர் முத்துசெல்வம், சமூக ஆர்வலர் ரமேஷ்குமார், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் முன்னாள் ஊராட்சி தலைவர் நாகலட்சுமி தலைமையில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் தென்னவன் கொடி ஏற்றி சிறப்புரைத்தார். ஆசிரியர்கள் ராஜவடிவேல், விஜயலட்சுமி, தமிழ்ச்செல்வி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நுார் முகமது பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மேல அனுப்பானடி ஏ.பி.டி.துரைராஜ் நர்சரி பள்ளியில் பேராசிரியர் பிரேமநாதன் கொடியேற்றினார். தாளாளர் ரமேஷ் பாபு தலைமை வகித்தார்.
அமெரிக்கன் கல்லுாரியின் கோரிப்பாளையம், சத்திரப்பட்டி வளாகங்களில் முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கொடியேற்றினார். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. பழைய நத்தம் ரோடு பாலமந்திரம் பள்ளியில் செயலாளர் சோமசுந்தரம் கொடியேற்றினார். மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாய்கீதா, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி உட்பட பலர் பங்கேற்றனர். ஊமச்சிகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலமுருகன் கொடியேற்றினார். முன்னாள் மாணவர்கள் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை வழங்கினர்.
சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நாராயணன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் ரமேஷ் கொடியேற்றினார். நேதாஜி மன்ற தலைவர் சுவாமிநான், வழக்கறிஞர் லட்சுமிநாராயணன் பங்கேற்றனர். பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபையின் சார்பில் மாணவர்களுக்கு பரிசுகளை முன்னாள் மாணவர்க்ள் தண்டீஸ்வரன், ஹரிமணிகண்டன் வழங்கினர். உதவித் தலைமை ஆசிரியர் ஆதிஞானகுமரன் நன்றி கூறினார்.
கூடல்நகர் ஆல்வின் மெட்ரிக் பள்ளியில் மதுரை காமராஜ் பல்கலை சின்டிகேட் உறுப்பினர் புஷ்பராஜ் கொடியேற்றினார். பள்ளி தாளாளர் தேவன்குமார், முதல்வர் முருகேஸ்வரி, துணை முதல்வர் தங்க முனியாண்டி பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
கருமாத்துார் புனித கிளாரட் பள்ளியில் தலைமை ஆசிரியர் சூசை மாணிக்கம் கொடியேற்றினார். பொருளாளர் செல்வமணி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் அருள்ஜோசப், ஆசிரியர்கள் சூசை உட்பட பலர் பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அவனியாபுரம் எஸ்.பி.ஜே., மெட்ரிக் பள்ளியில் டாக்டர் பார்த்திபன் கொடியேற்றினார். முதல்வர் அபர்னா தலைமை வகித்தார். செயலாளர் பழனிசாமி பங்கேற்றார். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நாகமலை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் தாளாளர் கணபதி தலைமையில் நடந்த விழாவில் முதல்வர் லதா திரவியம் கொடியேற்றினார். என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. துணை முதல்வர் அனிதா கரோலின், தலைமை ஆசிரியை பொற்கொடி உட்பட பலர் பங்கேற்றனர்.
பொது அமைப்புகள்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் தாம்ப்ராஸ் அமைப்பின் விழாவில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து கொடியேற்றினார். மூத்த ஆலோசகர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ஜெகநாதன், மகளிரணி செயலாளர் ராஜம்மீனாட்சி, இளைஞரணி மீனாட்சிசுந்தரம், ஆலோசகர் கல்யாணி உட்பட பலர் பங்கேற்றனர்.
கோமதிபுரம் சென்ஸ் வளாகத்தில் ஸ்ரீநாக்ஸ் இயக்குநர் இந்திராபதி கொடியேற்றினார். பொது மேலாளர் கணேசன், நிர்வாகிகள் காயத்ரி, ஷோபாராணி, மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். எஸ்.எஸ்.காலனியில் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் குடியரசு தின விழா நடந்தது. மாநில மூத்த ஆலோசகர் ஜெகன்னாத அய்யங்கார் கொடியேற்றினார். தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர். லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
காமராஜர் ரோடு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க வளாகத்தில் தலைவர் ஜெகதீசன் கொடியேற்றி சிறப்புரைத்தார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். கீழமாசி வீதி தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தில் தலைவர் வேல்சங்கர் கொடியேற்றி சிறப்புரைத்தார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். சிக்கந்தர் சாவடியில் உள்ள வேளாண் உணவு வர்த்தக மையத்தில் நிறுவனர் ரத்தினவேல் கொடியேற்றினார். வேளாண் உணவுத் தொழில் துறையினர், விவசாயிகள் பங்கேற்றனர்.
காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடத்தில் செயலாளர் வெங்கடேசன் கொடியேற்றினார். மடீட்சியாவில் தலைவர் கோடீஸ்வரன் கொடியேற்றினார். அறக்கட்டளைத் தலைவர் அரவிந்த் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் பங்கேற்றனர். கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்கத்தில் உப தலைவர் ரகுபதி கொடியேற்றினார். தலைவர் ராகவன், செயலாளர் பழனிக்குமார், ஆலோசகர் கருணையானந்தன், செயற்குழு உறுப்பினர் சேது ராம், நிர்வாகிகள் திரவியம், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிள் நடந்தன. ஜான்சி ராணி பூங்காவில் நடந்த விழாவில் கர்நாடகத்தைச் சேர்ந்த முத்தண்ணா நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்தார். ஜெசி ரத்தீஷ்பாபு கொடியேற்றினார்.
நரிமேடு சிங்கராயர் காலனி குடியிருப்போர் சங்கத்தில் தலைவர் சென்ராயன் கொடியேற்றினார். செயலாளர் சையது அப்துல் காதர், பொருளாளர் பத்மநாபன், நிர்வாகிகள் சங்கரலிங்கம், செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். பைபாஸ் ரோடு வஜ்ரா அடுக்குமாடி குடியிருப்பில் நலச்சங்க உறுப்பினர் இளங்கோவன் கொடியேற்றினார். பொதுச் செயலாளர் பிரசன்ன ராணி உட்பட பலர் பங்கேற்றனர். பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்டில் எஸ்.டி.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோ சங்க தலைவர் மதியழகன் கொடியேற்றினார். தெற்கு மாவட்ட தலைவர் சாகுல் அமீது, மண்டல செயலாளர் சிக்கந்தர், எஸ்.டி.பி.ஐ., தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் பங்கேற்றனர்.
எஸ்.டி.பி.ஐ., தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் நடந்த விழாவில் மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் கொடியேற்றினார். துணைத் தலைவர் அபு தாஹிர், பொருளாளர் ஆசாத் பங்கேற்றனர். மகளிரணி சார்பில் ஓபுளாபடித்துறை அருகே மாவட்ட தலைவர் நஸ்ரத் பேகம் கொடியேற்றினார்.
கலைநகர் விரிவாக்கப்பகுதி பல்லவி நகர், பாலாஜி நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் தலைவர் சக்திவேல் கொடி ஏற்றினார். துணைத்தலைவர் பால் பேரின்பநாதன், பொதுச் செயலாளர் குமரகுருபரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ராஜா முத்தையா மன்ற வளாகத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி மோகன் காந்தி கொடியேற்றினார். சங்க பொருளாளர் சோமசுந்தரம், அறங்காவலர்கள் கிருஷ்ணன், ராமசாமி பங்கேற்றனர். ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லுாரி மாணவர்கள், தேவார இசை வகுப்பு மாணவர்கள் கொடி பாடல் பாடல் பாடினர். வில்லாபுரம், அக்ரிணி வளாகத்தில் மை மதுரை பள்ளிகளில் அறம் அரிமா சங்க விழாவில் தாளாளர் கீதா கண்ணன் கொடியேற்றினார். துணை முதல்வர் அபராஜிதா, இயக்குநர் கண்ணன் பங்கேற்றனர்.
மாநகராட்சி 9வது வார்டு இலந்தைக்குளம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மூத்த உறுப்பினர் மணி கொடியேற்றினார். நிர்வாகிகள் கிருஷ்ணன், சபாரத்தினம், ராமு, அலிசித்திக், சையது அபுதாகிர், பாண்டியராஜன் பங்கேற்றனர். அழகப்பன் நகர் பகுதி நேருநகர் (டி.வி.எஸ்., நகர்) சேவா சங்கம் சார்பில் நடந்த விழாவில் தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். சுந்தரேஸ்வரன் வரவேற்றார். துணைத் தலைவர் ஈஸ்வரன், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் ரங்கராஜன் பங்கேற்றனர். கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம், 'உரிமைத் திருநாள்' என்ற தலைப்பில் பேசினார். ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
மதுரை மேலக்கால் ஜெயபாரத் கிளாசிக் சிட்டி வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் தலைவர் பிரேம்சந்தர் தலைமையில், மூத்த குடிமக்கள் மரகதம்மாள் கொடியேற்றினார். கோபால கிருஷ்ணன் வரவேற்றார். பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார். கிருஷ்ணாபுரம் காலனி பாரதிநகர் அபுபக்கர் சித்திக் பள்ளிவாசல் வளாகத்தில் தணிக்கைத் தறை இணை இயக்குனர் சர்தார் மாலிக் தலைமையில், முன்னாள் கவுன்சிலர் ஷேக் உசேன் முன்னிலையில், ஜமாத் தலைவர் முகமதுஎஹியா கொடியேற்றினார். மாடர்ன் நுார்முகமது, உதவிச் செயலாளர் அப்பாஸ், பள்ளிவாசல் இமாம் பாஷாபாய், சாகுல், பொருளாளர் பிர்தொஸ்கான் பங்கேற்றனர்.
மதுரை காமராஜர் ரோடு மீனாட்சிபுரம் முதல் தெரு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் சங்கத் தலைவர் ராமலிங்கம் கொடியேற்றினார். வழக்கறிஞர் கோபிநாத் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மதுரை வெற்றிலை பாக்கு பீடிசிகரெட் வர்த்தக சங்க விழாவில் தலைவர் திருப்பதி கொடியேற்றினார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ரங்கநாதன், முன்னாள் தலைவர் அய்யாத்துரை உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை காபி, டீ, வர்த்தக சங்கத்தில் தலைவர் சுகுமாறன் கொடியேற்றினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
------------------------திருப்பரங்குன்றம்
சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். உதவி கமிஷனர் ராதா, கவுன்சிலர் இந்திரா காந்தி, பணியாளர்கள் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் நிலைய மேலாளர் வினோத்குமார் கொடியேற்றினார். தென்ன ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசுந்தரம், ரயில் நிலைய மேலாளர் ஹிம்நிசூ மதுக்குமார், அலுவலர்கள் அகல்யா, வெங்கடேசன், விஷ்ணு சிங் ஸ்ரூபக்குமார், உதயகுமார், முத்தையா, தனுஷ்கோடி, மனோகரன் பங்கேற்றனர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் கருப்பசாமி தலைமையில் மூத்த உதவியாளர் முரளிதரன் கொடி ஏற்றினார். பணியாளர்கள் ஆனந்தபாபு பிரியதர்ஷினி பங்கேற்றனர். ஹார்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் மக்கள் நல மன்ற செயற்குழு உறுப்பினர் வேட்டையார் குடியேற்றினார். நிர்வாகிகள் காளிதாசன், அண்ணாமலை, குலசேகரன் கிருஷ்ணசாமி பங்கேற்றனர். மாநில வினாடி வினா போட்டியில் 2ம் பரிசு பெற்ற அஜித்குமார், நித்தின் கவுரவிக்கப்பட்டனர். திருநகர் மக்கள் மன்றம் சார்பில் மன்ற தலைவர் செல்லா தலைமை வகித்தார் . துணைத் தலைவர் பொன் மனோகரன் வரவேற்றார். உணவக உரிமையாளர் சேகர் கொடியேற்றினார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணசாமி, ராஜேந்திரன், ஜெயின்ஸ் குரூப் செல்வராஜ் கலந்து கொண்டனர்.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் வரலாற்று துறை தலைவர் உமா கொடி ஏற்றினார். கல்லூரி தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராம சுப்பையா, பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். என்.சி.சி. வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் முதல்வர் சந்திரன் தலைமை வகித்து கொடியேற்றினார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். என். எஸ். எஸ்., திட்ட அதிகாரிகள் விஜயகுமார் ராமகிருஷ்ணன், இருளப்பன் ஏற்பாடுகள் செய்தனர்.
சவுராஷ்டிரா கல்லுாரியில் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்து கொடி ஏற்றினார். முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், மகளிர் கல்லுாரி முதல்வர் பொன்னி, டீன் மேகலா, தேர்வு கட்டுப்பாட்டாளர் துரைச்சாமி, வேலைவாய்ப்பு, உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், என்.சி.சி. அலுவலர் மணிகண்டன், என்.எஸ்.எஸ். அலுவலர்கள் குணசீலன், செந்தில்குமார் பங்கேற்றனர்.
திருமங்கலம்
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ராஜகுரு கொடியேற்றினார். தாசில்தார்கள் மனேஷ்குமார், சிவக்குமார் வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக பணியாற்றிய வி.ஏ.ஓ., கள், கிராம உதவியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மனேஷ்குமார் கொடியேற்றினார். துணை தாசில்தார் முனிச்சாமி, வருவாய் ஆய்வாளர்கள் தனசேகரன், அசோக்குமார் கலந்து கொண்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் கொடியேற்றினார். நீதிபதிகள் தினேஷ் பாபு, மணிகண்டன், வக்கீல் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் அறிவொளி பங்கேற்றனர். மேல உரப்பனுாரில் முன்னாள் படை வீரர்கள் நல சங்கத்தை தாசில்தார் மனேஷ்குமார் தொடங்கி வைத்து கொடியேற்றினார்.
டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.எஸ்.பி., அன்சுல் நாகர் கொடியேற்றினார். நகராட்சி அலுவலகத்தில் தலைவர் ரம்யா கொடியேற்றினார். துணைத் தலைவர் ஆதவன், கமிஷனர் அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., கீதா கொடியேற்றினார். பி.டி.ஓ., சந்திரகலா உட்பட பலர் பங்கேற்றனர். நகர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சரவணன் கொடியேற்றினார். எஸ்.ஐ., ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., பேச்சிமுத்து கொடியேற்றினார். கிளை சிறையில் கண்காணிப்பாளர் பரணி கொடியேற்றினார்.
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கிளையில் தலைவர் மகபூப் பாட்ஷா கொடியேற்றினார். ஆலோசகர் வெங்கிடகிருஷ்ணன், நிர்வாகிகள் ரகுநாதன் நடராஜன் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
ரோஸ் அரிமா சங்கம் சார்பில் தெற்கு தெருவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் தலைவர் சுந்தரம், பட்டய தலைவர் பால்ராஜ், ஒருங்கிணைப்பாளர் சிவராஜன், செயலாளர் விஜய பாண்டி, பொருளாளர் பழனி முத்துக்குமரன் பங்கேற்றனர்.
நகராட்சி 10வது வார்டு பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் அஜ்மீர் அலி தலைமை வகித்தார். கவுன்சிலர் ரம்ஜான் பேகம் கொடியேற்றினார். தி.மு.க., செயலாளர் ஜாகிர் உசேன் கலந்து கொண்டனர்.
திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராமன் கொடியேற்றினார். நகராட்சி தலைவர் ரம்யா, தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் ரம்ஜான் பேகம், மங்கள கவுரி உட்பட பலர் பங்கேற்றனர். மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஈஸ்டர் ஜோதி கொடியேற்றினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல் கொடி ஏற்றினார். வருவாய்த்துறை அலுவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர், கிராமியக்கலைஞர்கள், சிறைத்துறை போலீசார் பங்கேற்றனர். நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி மகாராஜன் கொடி ஏற்றினார். அரசு வழக்கறிஞர் ராஜசேகர், வக்கீல்கள், போலீசார் , பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நகராட்சி அலுவலகத்தில் பொறியாளர் பட்டுராஜன் தேசியக் கொடி ஏற்றினார். நகராட்சி தலைவர் சகுந்தலா, கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஜெயசீலன் மெட்ரிக்பள்ளியில் நிர்வாகி ஜெயந்த் கொடி ஏற்றினார். ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். உத்தப்பநாயக்கனூர் ரத்தினசாமி நாடார் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரோஸ்சுமதி, நிர்வாகிகள் முன்னிலையில் துணைத் தலைமை ஆசிரியர் சுகபிரபு தேசியக்கொடி ஏற்றினார். உத்தப்பநாயக்கனுார் ஜெயசீலன் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ராஜ்குமார் கொடி ஏற்றினார்.
எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஆறுமுகசுந்தரி முன்னிலையில் தாளாளர் பொன்கருணாநிதி கொடி ஏற்றினார். தர்மவித்யாபவன் பள்ளியில் நிர்வாகி பொன்திருமலைராஜன் கொடி ஏற்றினார். முதல்வர் மேகலா, ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். சின்னக்கட்டளை பாரதியார் நர்சரி பிரைமரி பள்ளியில் முதல்வர் ஆனந்தராஜா முன்னிலையில், நிர்வாகி உதயசந்திரன் கொடி ஏற்றினார். எழுமுலை அரிசன் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வளர்மதி முன்னிலையில் நிர்வாகி வரதராஜன் கொடி ஏற்றினார்.
திருவள்ளுவர் கல்வி நிறுவனங்கள் விழாவில், கல்வியியல் கல்லுாரியில் நிர்வாகி சென்னகிருஷ்ணன், முதல்வர் கருப்பசாமி முன்னிலையில் நிர்வாகி லோகநாதன், கலை அறிவியல் கல்லுாரியில் நிர்வாக அலுவலர் சந்திரன், முதல்வர் செல்வகுமாரி முன்னிலையில் நிர்வாகி சுப்பிரமணி, பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்வர் சுபாராஜன் முன்னிலையில் நிர்வாகி பெருமாள், மெட்ரிக் பள்ளியில் நிர்வாகி செல்வராஜ், முதல்வர் தனபாக்கியம் முன்னிலையில் ராமகிருஷ்ணன் கொடியேற்றினர்.
விச்வ வித்யாலயா பள்ளியில் தாளாளர் பாணடியன் கொடி ஏற்றினார். நிர்வாக அலுவலர் வாசகம், முதல்வர் அருண்குமார், நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். செல்லாயிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் கொடி ஏற்றினார்.
மேலுார்
மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முத்து கிருஷ்ண முரளி தாஸ் ,சார்பு நீதிமன்றத்தில் சாமுண்டீஸ்வரி பிரபா கொடியேற்றினர். வழக்கறிஞர் சங்க செயலாளர் சுரேந்தர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை, டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., சிவகுமார், மேலுார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சிவசக்தி, நகை மற்றும் அடகு கடை முன்னேற்ற நலச்சங்கத்தில் தலைவர் சுரேஷ், நகராட்சியில் முகமது யாசின், லதா மாதவன் கல்வி நிறுவனங்களில் சேர்மன் மாதவன், மில்டன்,ஆர்.வி., ஜாஸ் பள்ளியில் தாளாளர்கள் ரவிச்சந்திரன், ஜான் வின்சென்ட், விஜயலட்சுமி, ஷ்யாம் கொடியேற்றினர்.
சோழவந்தான்
திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் குலபதி சுவாமி அத்யாத்மானந்த கொடியேற்றினார். கல்லுாரி செயலர் சுவாமி வேதானந்த, முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். என்.சி.சி.,அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். துணை முதல்வர் கார்த்திகேயன் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பாபு, தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெய்சங்கர், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் அசோக் குமார், ரமேஷ் குமார், உட்ப ட பலர் பங்கேற்றனர். விளையாட்டுத்துறை இயக்குனர் நிரேந்தன் நன்றி கூறினார்.
பொட்டுலுப்பட்டி காந்திஜி ஆரம்ப பள்ளியில் செயலாளர் நாகேஸ்வரன் கொடியேற்றினார். பள்ளி குழு தலைவர் தனபால் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை வெங்கடலட்சுமி முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை ஆசிரியர் ஆசிர்வாதம் பீட்டர் ஒருங்கிணைத்தார். ஆசிரியைகள் எஸ்தர் டார்த்தி, ரெக்ஸ்லின் நன்றி கூறினர்.
பேரையூர்
பேரையூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி.எம் ரமணி கொடியேற்றினார். தலைமை எழுத்தாளர் அன்னக்கிளி, பணியாளர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்லப்பாண்டி கொடியேற்றினார். டி.எஸ்.பி அலுவலகத்தில் டி.எஸ்.பி துர்காதேவி கொடி ஏற்றினார். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கே.கே குருசாமி கொடியேற்றினார் அரசு மருத்துவமனையில் டாக்டர் மகேஷ்குமார் கொடியேற்றினார்.
போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பூமா கொடியேற்றினார் எஸ்.ஐ.,க்கள் சந்தோஷகுமார், உதயசூரியன் உட்பட பலர் பங்கேற்றனர். எஸ்.கோட்டைபட்டி பராசக்தி மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஜெகதீசன் கொடியேற்றினார். அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்தழகு கொடியேற்றினார்.
டி.கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்திரா கொடியேற்றினார். எம்.எஸ்.ஆர்., மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் சீனிவாசன் கொடியேற்றினார். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் குருநாதன் கொடியேற்றினார். எஸ்.ஐ., வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். பேரூராட்சியில் தலைவர் முத்துகணேசன் கொடிஏற்றினார்.