/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
/
மதுரையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 28, 2025 05:38 AM
மதுரை: மதுரையில் பள்ளி, கல்லுாரி, பல்வேறு அமைப்புகள் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
யூ.சி., மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் தொடர்பு அலுவலர் ராஜ்குமார் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் பாபுசாமி கமலாகரன் தலைமை வகித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வடமலையான் மருத்துவமனை, வடமலையான் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் அலைடு ஹெல்த் சயின்சஸ் சார்பில் நடந்த விழாவில் மருத்துவ இயக்குநர் டாக்டர் பாப்புநாதன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஜாஸ்மின் வரவேற்றார். மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் சுந்தரராஜன் கொடியேற்றி, கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு பதக்கம் வழங்கினார். கல்வி ஆலோசகர் டாக்டர் ஆனந்த ராமகிருஷ்ணன், பேராசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.
பெருங்குடி அமுதம் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஜெயவீரபாண்டியன் தலைமையில் முதல்வர் ஜெயஷீலா கொடியேற்றினார். துணை முதல்வர் ஸ்டெல்லா ஜெயமணி, ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் சிறப்புரை, நடனம், நாடக நிகழ்ச்சிகள் நடந்தன. லேடி டோக் கல்லுாரியில் தமிழ்த்துறைத் தலைவர் கவிதா ராணி கொடியேற்றி பேசினார். முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, மாணவர் நலப்பிரிவு டீன்கள் ஆரோக்கிய ஷியாமளா, மவுனசுந்தரி, உதவி டீன்கள் ஜூலி பிரதீபா, எஸ்தர் எலிசபெத் கிரேஸ், பேராசிரியர்கள் சுஜாதா, லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். நகர் போலிசாருடன் இணைந்து போதைக்கு எதிரான 'கிளப்' துவக்கப்பட்டது. மதுரை நியூ எல்.ஐ.ஜி., காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தலைவர் ஈஸ்வரலால் தலைமையில் கொண்டாடப்பட்டது. 33 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மாலதி கொடியேற்றினார். செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசினார். ஒருங்கிணைப்பாளர் அரங்கண்ணல், பொருளாளர் குமரப்பன், உறுப்பினர்கள், குடியிருப்போர் பங்கேற்றனர்.
மாறுவேடமிட்டு அசத்தல் : மதுரை ரயில்வே காலனியில் கோட்ட பெண்கள் நலச்சங்க தலைவி பிரியா அகர்வால் தலைமையில் ரயில்வே ஊழியர்களின் குழந்தைகள் 76 பேர் காந்தி, நேரு, வீரன் அழகுமுத்துக்கோன், வேலுநாச்சியார், மருதுபாண்டியர், கட்டபொம்மன் உள்ளிட்ட 76 தலைவர்களின் வேடம் தரித்து 76 நிமிடங்கள் அவர்களைப்பற்றி பேசினர். பின் இந்தியா போன்று வடிவமைப்பில் நின்று காட்சி தந்தனர். இது புதுச்சேரி அகில இந்திய சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.புத்தக நிர்வாகம் சார்பில் தலைமை நிர்வாக அதிகாரி வெற்றி, பிரியா அகர்வாலுக்கு 'சாதனை பெண்மணி' விருது வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, ரயில்வே பள்ளி ஆசிரியர் தமிழ்ச்செல்வன், ரயில்வே ஊழியர் நல ஆய்வாளர்கள் நீல மணிவண்ண கண்ணன், சந்தானம் உட்பட பலர் பங்கேற்றனர்.
விக்டோரியா எட்வர்ட் அரங்கில் தனி அலுவலர் விஜயசாந்தி கொடியேற்றினார். உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.நேரு நகர் (டி.வி.எஸ்., நகர்) சேவா சங்கத்தில் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் கொடியேற்றினார். சங்கத் தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். துணைச் செயலாளர் சுந்தரேஸ்வரன், துணைத் தலைவர் ஈஸ்வரன், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் ரங்கராஜன், நிர்வாகிகள் விஜயன், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். வில்லாபுரம் மணிகண்டன் நகர் நலச்சங்க வளாகத்தில் எம்.எல்.ஏ., பூமிநாதன் கொடியேற்றினார். கீரைத்துறை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி , சங்க தலைவர் ராஜ்குமார், செயலாளர் ராமர் முரளி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
சர்வ சமய வழிபாடு: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் டீன் அருள் சுந்தரேஷ்குமார் கொடியேற்றினார். செவிலியர் பள்ளி, செவிலியர் கல்லுாரி, பார்மசி கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அம்பிகா கல்லுாரியில் தாளாளர் கனகாம்பாள் தேசியக்கொடி ஏற்றினார். பேராசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். முதல்வர் சாராள் தேம்பாவணி தலைமை வகித்தார். காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் பேசினார். மாணவியரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. காந்தி மியூசியத்தில் நடந்த விழாவில் தியாகி கட்டச்சாமி மனைவி சொர்ணவள்ளி கொடியேற்றினார். செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். காந்திய சிந்தனை கல்லுாரி முன்னாள் முதல்வர் முத்துலட்சுமி பேசினார். காந்திக்கு மலரஞ்சலி, சர்வ சமய வழிபாடு நடந்தது. அரசு மியூசிய காப்பாட்சியர் மருது பாண்டியன், சமூக ஆர்வலர் வீரப்பன், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் கலந்து கொண்டனர்.
தானம் அறக்கட்டளையில் நடந்த விழாவில் நிர்வாக இயக்குநர் வாசிமலை கொடியேற்றினார். எழுத்தாளர் தீபா நாகராணி கலந்து கொண்டார். கட்டுரை, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தானம் மக்கள் கல்வி நிலையத்தில் பேராசிரியர் கண்ணன், கல்வி நிலையத்தில் இயக்குநர் குருநாதன் கொடியேற்றினர். மதுரை எல்லீஸ்நகர் ஜூபிடர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். வெங்கடசுப்பிரமணியன் கொடியேற்றினார். நிர்வாக குழு உறுப்பினர் வைத்தியன் பங்கேற்றார்.
திருப்பரங்குன்றம்: அமிர்த வித்யாலயம் பள்ளியில் முதல்வர் சசிரேகா தலைமையில், முன்னாள் ராணுவ வீரர் ராமன் தேசிய கொடி ஏற்றினார். மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. தோப்பூர் சிவானந்தா வித்யாலயாவில் தலைவர் சுவாமி சிவானந்தா சுந்தரானந்தா மகராஜ் தலைமையில் டி.வி.எஸ்., பள்ளி முன்னாள் முதல்வர் குருராஜன் கொடியேற்றினார். தாளாளர் கணேஷ்பாபுஜி, முதல்வர் கண்ணன் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தமிழ்நாடு மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேஷன் சார்பில் துணைத் தலைவர் சிதம்பரநாதன் தலைமையில் செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கொடி ஏற்றினார்.
வாடிப்பட்டி: வாடிப்பட்டி நீதிமன்றத்தில் நீதிபதி ராம் கிஷோர் தலைமை வகித்தார். நீதிபதி செல்லையா கொடி ஏற்றினார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் அரிச்சந்திரன், முத்துமணி, செயலாளர் முருகேசன், பொருளாளர் சிவராமன், துணைத் தலைவர் அழகேசன், அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் செல்வகுமார் வரவேற்றார். சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர். முன்னாள் செயலாளர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.
தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை வகித்துக் கொடியேற்றினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூனியன் கமிஷனர் லட்சுமி காந்தம் கொடி ஏற்றினார். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பால்பாண்டியன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். துணைத் தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார். பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
பரவை பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜூலான் பானு கொடி ஏற்றினார். பேரூராட்சி தலைவர் கலாமீனா ராஜா, வார்டு கவுன்சிலர்கள் சவுந்தரபாண்டியன், செபஸ்தியம்மாள், வின்சி, திருஞானகரசி, மாரியம்மாள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வெங்கடேசன்,கந்தவேல் துரைபாண்டி, ராம் நிவாஸ், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.