/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடியரசு தின விழா மாநில ஹாக்கி போட்டி
/
குடியரசு தின விழா மாநில ஹாக்கி போட்டி
ADDED : ஜன 17, 2025 05:26 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் குடியரசு தின விழா மாநில ஹாக்கி போட்டிகள் 17 வயது மாணவர்கள் பிரிவு ஹாக்கி போட்டிகள் 3 நாட்கள் நடந்தது.
இதில் முறையே முதல் 4 இடங்களை அரியலுார் அரசு பள்ளி, வேலுார் கார்னம்பட், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை புனித ஜோசப் பள்ளி அணிகள் பிடித்தன. மாவட்ட கல்வி அதிகாரி அசோக்குமார் பரிசுகள் வழங்கினார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் இனிக்கோ எட்வர்ட் ராஜா, ராம்பிரசாத் ராஜ், உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் லாரன்ஸ் வரவேற்றார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், வெள்ளைச்சாமி, சந்திரமோகன், செந்தில் குமார், கோவிந்தன், சாம்சுதீன் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.