தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பல்கலை தினக்கூலி பணியாளர் பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை

பல்கலை தினக்கூலி பணியாளர் பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை

பல்கலை தினக்கூலி பணியாளர் பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை


UPDATED : அக் 21, 2026 05:58 PM

ADDED : அக் 21, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 05:58 PM ADDED : அக் 21, 2026 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தினக்கூலி பணியாளர் சங்கத் தலைவர் பாண்டியராஜன், செயலாளர் கருப்பையா, துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதாவது:

20 ஆண்டுகளுக்கும் மேல் 167 பேர் தினக்கூலி பணியாளராக உள்ளோம். சம்பளம் ரூ.10 ஆயிரத்தை தாண்டவில்லை. 2006ன் சிண்டிகேட் தீர்மானம்படி 10 ஆண்டுக்கும் மேல் பணியாற்றிய 136 தினக்கூலிகள் ஏற்கனவே நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது.

தினக்கூலிகள் பலர் 45 –55 வயதில் உள்ளனர். பல்கலை விதிப்படி 10 ஆண்டுக்கும் மேல் பணியாற்றிய எங்களை நிரந்தரம் செய்ய வேண்டும். த.வெ.க., தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டு தினக்கூலியாக உள்ளோர் நிரந்தரம் செய்யப்படுவர் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. சிலர் இறந்து விட்டனர். பலர் ஓய்வும் பெற்றுவருகின்றனர். பணியில் உள்ளவர்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us