/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் காணாமல் போன பொருட்கள் மீட்டுத்தர கலெக்டரிடம் வலியுறுத்தல்
/
இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் காணாமல் போன பொருட்கள் மீட்டுத்தர கலெக்டரிடம் வலியுறுத்தல்
இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் காணாமல் போன பொருட்கள் மீட்டுத்தர கலெக்டரிடம் வலியுறுத்தல்
இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் காணாமல் போன பொருட்கள் மீட்டுத்தர கலெக்டரிடம் வலியுறுத்தல்
ADDED : செப் 24, 2024 05:12 AM

மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நேற்று நடந்தது. கூடுதல் கலெக்டர் மோனிகா, பயிற்சி கலெக்டர் வைஷ்ணவி, டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், பல்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
செப்.23 முதல் 29 வரை இந்திய சைகை மொழி தினம் செப். 29 ல் காதுகேளாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் ஊர்வலத்தை கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார். காந்தி மியூசியத்தில் முடிவடைந்த ஊர்வலத்தில் மாவட்ட மறுவாழ்வுத்துறை அலுவலர் சுவாமிநாதன், தொழில் வழிகாட்டி வெங்கடசுப்ரமணியன், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்க செயலாளர் பாலமுருகன், செவித்திறன் கேளாதோர் சங்க நிர்வாகி சொர்ணவேல், காதுகேளாதோர் சங்க நிர்வாகி பூரணசந்திரன், கவுன்சிலர் குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து செப்.4ல் செயற்கை கை கேட்டு விண்ணப்பித்த பரவை மாணவர் அழகுவசந்த் உட்பட மாற்றுத்திறனாளிகள் சிலருக்கு செயற்கை கை, கால்கள், மூன்று சக்கர சைக்கிள்களை கலெக்டர் வழங்கினார். ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு டாக்டர் பாலகுருசாமி வீல்சேர்களை வழங்கினார்.
அண்ணாநகர் வழக்கறிஞர் ரமேஷ் மனு: மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்திய செஞ் சிலுவை சங்கம் செயல்படுகிறது. கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த ரூ.பல லட்சம் மதிப்பிலான கான்சென்டிரேட்டர்கள் மாயமாகி விட்டன. ரூ. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பராமரிப்பின்றி உள்ளன. அவசர உதவிக்காக வாங்கிய ஜீப் தற்போது எங்கு உள்ளது எனத் தெரியவில்லை. அவற்றையெல்லாம் கண்டு பிடிப்பதுடன், உடனே தேர்தல் நடத்த வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

