/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேவர் ஜெயந்திக்கு வாடகை வாகனத்தில் செல்ல கோரிக்கை
/
தேவர் ஜெயந்திக்கு வாடகை வாகனத்தில் செல்ல கோரிக்கை
ADDED : அக் 26, 2024 07:02 AM
மதுரை: தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னிற்கு தனியார் வாடகை வாகனங்களில் சென்று வர அனுமதிக்க தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சங்கிலி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், அவரது 117வது ஜெயந்தி விழா, 62வது குருபூஜை அக்., 28 முதல் அக்., 30 வரை தமிழக அரசால் நடத்தப்பட உள்ளது.
பசும்பொன்னிற்கு தனியார் வாடகை வாகனங்களில் சென்று வர அனுமதி, பாதுகாப்பு வழங்க கோரி, மதுரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., ராமநாதபுரம் கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு நேற்று, மதுரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., ராமநாதபுரம் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நவ., 22க்கு ஒத்திவைத்தது.