ADDED : செப் 27, 2024 06:55 AM
திருமங்கலம்: கப்பலுார் சிட்கோ தொழிலதிபர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் ரகுநாத ராஜா தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அறிவித்துள்ள தொழில் உத்தரவாத கடன் திட்டம், கோவிட் காலங்களில் அளித்தது போல முன் மானியம் வழங்குவதை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.
கப்பலுார் தொழிற்பேட்டையின் அடிப்படை வசதிகளான ரோடு, மழைநீர் வடிகால், குடிநீர், தெருவிளக்குகள் ஆகியவை நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல் இரு சக்கர வாகனங்கள் கூட பயணிக்க முடியாத நிலைமை உள்ளது.
இதை சீரமைக்க தொழிற்சாலை கட்டுமான வளர்ச்சி திட்டத்தின் மூலமாக மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். கப்பலுார் தொழிற்பேட்டையில் உற்பத்தியாகும் பொருட்களை காட்சிப்படுத்த ஒருங்கிணைந்த வளாகம் அமைக்க வேண்டும்.
தமிழக அரசு உயர்த்திய 430 சதவீத நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செயலாளர் வாசுதேவன், பொருளாளர் இளங்கீரன், ஆடிட்டர் சங்கரநாராயணன், சட்ட ஆலோசகர் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

