/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
23 தொழிலாளருக்கு மீண்டும் பணி வழங்க கோரிக்கை
/
23 தொழிலாளருக்கு மீண்டும் பணி வழங்க கோரிக்கை
ADDED : அக் 07, 2025 04:06 AM
மதுரை:மதுரை நகர் சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் குழுக் கூட்டம் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர் லெனின், மாநில செயலாளர் தெய்வராஜ், துணைத் தலைவர் மகாலட்சுமி முன்னிலை வகித்தனர்.
இதில் 'மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணி மேற்கொள்ளும் 'அவர் லேண்ட்' நிறுவனம் பணி நீக்கம் செய்த 23 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாலசுப்பிரமணியன் கூறுகையில், இந்நிறுவனம் 15 மாதங்களில் 60 டிரைவர்களை விளக்கம் கேட்காமல் பணி நீக்கம் செய்துள்ளது. இப்பிரச்னைக்கு கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும்
. நிறுவனம் தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்குடன் நடந்தால் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும் என்றார்.