UPDATED : நவ 06, 2026 07:08 PM
ADDED : நவ 05, 2026 05:19 PM
திருப்பரங்குன்றம்:
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை, விஞ்ஞான பிரசார், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது.
'நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்' என்ற தலைப்பில் நடந்த இம்மாநாட்டிற்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஆண்டனிபால் தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். செயலாளர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
மனிதனின் மரபியல்கூறு திட்ட விஞ்ஞானி ராம பிச்சப்பன், அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் மலர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தில்குமார், கணேசன், கார்மேகம்,ரகுபதி, தென்கரை முத்துப்பிள்ளை, மோகன் பேசினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ராமசுப்பையா, சி.இ.ஓ., தயாளன், மாநாடு மாநில ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி சான்றிதழ் வழங்கினர். அறிவியல் இயக்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம், தினகரன், கிருஷ்ணசாமி, துணைத் தலைவர் ரமேஷ், ஒச்சுக்காளை, புகழேந்தி, முத்துலட்சுமி, வெண்ணிலா, தமிழரசி பரிசு வழங்கினர். 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். நிர்வாகி காமேஷ் நன்றி தெரிவித்தார். மாநாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கோபிமணிவண்ணன், மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் சபரீஷ் ஒருங்கிணைத்தனர்.
