/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து லட்சுமி தீர்த்தகுளத்தில் ஆய்வு
/
குன்றத்து லட்சுமி தீர்த்தகுளத்தில் ஆய்வு
ADDED : டிச 08, 2024 05:04 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருக்குளத்தில் (லட்சுமி தீர்த்த குளம்) நடக்கும் சீரமைப்பு பணிகளை அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரியநாராயணன் ஆய்வு செய்தனர்.
திருக்குளத்தின் உட்புற கருங்கற்கள் சுவர்கள் 2018 முதல் ஒவ்வொரு பகுதியாக தொடர்ந்து விழுந்தன. அங்கு ரூ. 6.50 கோடியில் பழமை மாறாமல் சீரமைப்பு பணி நடக்கிறது. திருக்குளத்திற்குள் நடக்கும் பணிகள், பக்தர்களுக்கு நடைபாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டனர்.
சத்யபிரியா கூறியதாவது: தொடர்ந்து மழை பெய்ததால் பணிகளில் தாமதம் ஏற்பட்டு தற்போது மீண்டும் பணிகள் துரிதமாக நடக்கின்றன.
மூன்று பக்க படிக்கட்டு பகுதிகளில் இருந்த கருங்கற்களும் முழுமையாக அகற்றப்பட்டு அப்பகுதியிலும் தற்போது முன்பு இருந்தது போலவே கருங்கற்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கோயிலை ஒட்டியுள்ள படிக்கட்டுகளையும் சீரமைக்கவும், இப்பணிகள் நிறைவடைந்த பின்பு கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவங்க இருப்பதால் திருக்குள பணிகளை விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.