ADDED : ஆக 19, 2026 07:11 PM
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் 10வது மாநில கல்லுாரிகளுக்கு இடையேயான ஆராய்ச்சி போட்டிகள் (எக்ஸ்புளோரியா) நடந்தன.
கல்லுாரி ஆராய்ச்சி மேம்பாட்டு குழு சார்பில் நடந்த இப்போட்டியை ஹைடெக் அராய் நிறுவன மேலாண்மை இயக்குநர் பங்கேரா துவக்கி வைத்தார். முதல்வர் பாத்திமா மேரி வாழ்த்தி பேசினார். 750 தலைப்புகளில் ஆராய்ச்சி மாணவர்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
பேராசிரியைகள் சுஜாதா, கிரிஜா, பத்மாவதி, ராகம், சக்தீஸ்வரி, அருள்ஜோதி, சுலேகா நடுவர்களாக பங்கேற்றனர். துணை முதல்வர்கள் அருள்மேரி, வித்யா, பிந்து ஆண்டணி, புலத்தலைவர்கள் மாலதி, ஆஷா, பேராசிரியை அருள் மைக்கேல் செல்வி ஒருங்கிணைத்தனர்.
செயலாளர் இக்னேசியஸ் மேரி தலைமையில் நிறைவு விழா நடந்தது. சிறந்த ஆராய்ச்சி கட்டுரைக்காக தியாகராஜர் முதலாவது, லேடி டோக் 2வது, துாய சேவியர் கல்லுாரிகள் 3ம் பரிசுகளை வென்றன. ஆராய்ச்சிக் குழு சமர்ப்பித்ததில் பாத்திமா கல்லுாரி கணினி பயன்பாட்டியல், விலங்கியல், மேலாண்மைத் துறைகள் சிறப்பிடம் பெற்றன.
