/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆராய்ச்சி மேம்பாட்டு விழிப்புணர்வு பயிற்சி
/
ஆராய்ச்சி மேம்பாட்டு விழிப்புணர்வு பயிற்சி
ADDED : டிச 18, 2025 06:34 AM
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் 'தரமான ஆய்விதழ் வெளியீட்டிற்கான சிறந்த நடைமுறை, உத்திகள்' என்ற தலைப்பில் பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு விழிப்புணர்வு பயிற்சி, சொற்பொழிவு நடந்தது.
வணிக மேலாண்மையியல் துறைத் தலைவர் ஆஷா வரவேற்றார். மலேசியா இண்டி சர்வதேச பல்கலை (ஐ.என்.டி.ஐ.,) ஆராய்ச்சி இயக்குநர் அசோகன் வாசுதேவன், ஆராய்ச்சி நெறிமுறைகள், கல்விசார் எழுத்துகளில் எந்த அளவிற்கு ஏ.ஐ.,யை பயன்படுத்துவது குறித்து விளக்கினார். ஆய்வுகளின் வெளியீட்டு உத்திகள், இதழ் தேர்வு, நெறிமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். கணிதத்துறை உதவி பேராசிரியை வனிதா தொகுத்து வழங்கினார். ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவு புலத் தலைவர்கள் மாலதி ஆஷா ஒருங்கிணைத்தனர். மனையியல் துறை உதவிப் பேராசிரியை கார்த்திகா நன்றி கூறினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் இக்கல்லுாரியுடன் மலேசியா ஐ.என்.டி.ஐ., பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ஆராய்ச்சிகள், கல்வி வளங்களை மேம்படுத்துவது, உலகளாவிய கற்றல் வாய்ப்புகள் உறுதிசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்கலை ஆராய்ச்சி இயக்குநர் அசோகன் வாசுதேவன், கல்லுாரி முதல்வர் பாத்திமா மேரி, டீன் கலா, உதவி டீன்கள் மீனா, ஜெனிதா பங்கேற்றனர்.

