/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குப்பைக்குள் குடியிருப்போர் குமுறல்
/
குப்பைக்குள் குடியிருப்போர் குமுறல்
ADDED : செப் 11, 2025 06:00 AM

மேலுார் : மேலுாரில் துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரித்து சென்ற பிறகு பாலத்தில் போடும் குப்பையால் இரண்டு மற்றும் மூன்றாவது வார்டு மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலுார் நகராட்சிக்கு 2, 3 வார்டுகளில் வெங்கடேஷ் நகர், நொண்டி கோவில்பட்டி பகுதிகள் பெரியாறு கால்வாயின் இருபுறமும் அமைந்துள்ளன. கால்வாயின் கடைசி பகுதியில் பர்மா, சிலோன் காலனி அமைந்துள்ளது. இவ்வார்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கால்வாயின் நடுவில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கும், வெங்கடேஷ் நகர் செல்வதற்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இரண்டு வார்டுகளில் உள்ள குப்பையை துாய்மை பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து தினமும் சேகரித்துச் செல்கின்றனர்.
அதன்பின்பும் சிலர் பாலத்தில் குப்பையை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: சிலர் நினைத்த நேரத்தில் குப்பையை கொட்டுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு உண்டாகிறது. குப்பை கொட்டும் இடம் அருகே குடியிருப்போர் தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர்.
நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை பலகை வைப்பதோடு, துாய்மை பணியாளர் மூலம் கண்காணித்து குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.