/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கங்கா யமுனா தெருவில் கழிவுநீர் சங்கமம் எல்லீஸ்நகரில் குடியிருப்போர் முகம் சுளிப்பு
/
கங்கா யமுனா தெருவில் கழிவுநீர் சங்கமம் எல்லீஸ்நகரில் குடியிருப்போர் முகம் சுளிப்பு
கங்கா யமுனா தெருவில் கழிவுநீர் சங்கமம் எல்லீஸ்நகரில் குடியிருப்போர் முகம் சுளிப்பு
கங்கா யமுனா தெருவில் கழிவுநீர் சங்கமம் எல்லீஸ்நகரில் குடியிருப்போர் முகம் சுளிப்பு
ADDED : பிப் 19, 2025 05:19 AM

மதுரை: மதுரையில் செயல்படாத மாநகராட்சி பூங்கா, இடிக்கப்பட்ட வணிக கட்டங்கள், சமூகவிரோதிகளின் ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டிய கிருதுமால் நதி என கணக்கில்லா பிரச்னைகளுடன் வாழ்வதாக எல்லீஸ் நகர் பகுதி ஜூபிடர் குடியிருப்போர் புலம்புகின்றனர்.
மதுரை எல்லீஸ் நகரில் கங்கா யமுனா தெரு, போடிலைன் பகுதிகளில் பல ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதி பிரச்னைகள் குறித்து ஜூபிடர் குடியிருப்போர் சங்கத் தலைவர் ராமனாதன், பொருளாளர் ராஜூ, செயலாளர் சுரேஷ், கவுரவ ஆலோசகர்கள் வெங்கடசுப்பிரமணியன், கர்ணன் கூறியதாவது:
பூங்கா திறப்பு எப்போது
போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள மாநகராட்சி சிறுவர் பூங்கா 6 ஆண்டுகளாக செயல்பாடற்று, பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது. ஆட்கள் நடமாடாததால் பாம்பு உட்பட விஷஜந்துகள் வசிக்கின்றன. அவை அடிக்கடி வீட்டுக்குள்ளும் படையெடுப்பதால் நிம்மதியாக துாங்க முடியவில்லை.
இடிக்கப்பட்ட வணிக கட்டடங்கள் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது. மழைநீர் வடிகால் வசதியை பிரதான தெருக்களில் அமைத்ததோடு கைவிட்டுவிட்டனர். அவ்வசதி மற்ற தெருக்களுக்கும் வேண்டும். கங்கா யமுனா தெருவையொட்டிய கிருதுமால் நதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
டிஜிட்டல் நுாலகம் வேண்டும்
இப்பகுதி வழியாக எல்லீஸ் நகர் - மாட்டுத்தாவணி, பெரியார் பஸ்ஸ்டாண்ட் -திருநகர், திருமங்கலம் பஸ்களை இயக்க வேண்டும். முக்கிய தெருக்களில் விளக்கு வசதி வேண்டும். குறுகிய தெருக்களில் ரோடு அமைக்க வேண்டும். ஹவுசிங் போர்டு பகுதியில் 'டிஜிட்டல் நுாலகம்' இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். மெயின் ரோட்டின் நடுவே குப்பை தொட்டி உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
சந்தையை மாற்ற வேண்டும்
நீண்டநாள் தேவையான சமுதாயக்கூடம் வேண்டும். போக்குவரத்து நெரிசல் உள்ளதால், செவ்வாய்க் கிழமை நடக்கும வாரச்சந்தையை அருகிலுள்ள மைதானத்திற்கு மாற்ற வேண்டும். தெருவில் திரியும் மாடுகள், நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும் என்றனர்.

