/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குப்பை எரிப்பு, ரோடு ஆக்கிரமிப்பில் குடியிருப்பு பரிதவிப்பில் பாரதியார் நகர் மக்கள்
/
குப்பை எரிப்பு, ரோடு ஆக்கிரமிப்பில் குடியிருப்பு பரிதவிப்பில் பாரதியார் நகர் மக்கள்
குப்பை எரிப்பு, ரோடு ஆக்கிரமிப்பில் குடியிருப்பு பரிதவிப்பில் பாரதியார் நகர் மக்கள்
குப்பை எரிப்பு, ரோடு ஆக்கிரமிப்பில் குடியிருப்பு பரிதவிப்பில் பாரதியார் நகர் மக்கள்
ADDED : ஜூலை 15, 2025 03:48 AM

மதுரை: நாகமலை புதுக்கோட்டை அருகே கரடிப்பட்டி பாரதியார் நகர் குடியிருப்பு பகுதி ஆக்கிரமிப்பு, குப்பையால் சூழப்பட்டுள்ளதால் மக்கள் துயரத்தில் தவிக்கின்றனர்.
பாரதியார் நகரில் 17 தெருக்களில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியினர் ரேஷன் கடைக்கு லெவல் கிராசிங்கை தாண்டி 2 கி.மீ., துாரம் ஆலம்பட்டி செல்ல வேண்டும். அவசர மருத்துவ உதவிக்கு 3 கி.மீ.,ல் உள்ள நாகமலைக்கு செல்ல வேண்டும்.
இப்பகுதி மேம்பாட்டுக்கு பணியாற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், தலைவர் முருகேசன், துணைத் தலைவர் ராமசாமி, செயலாளர் செல்வராஜ், துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், பொருளாளர் மீனாட்சிசுந்தரம், செயற்குழு உறுப்பினர்கள் பால் ரவீந்திரன், பாலுசாமி, தர்மலிங்கம், ஆலோசகர் நாகநாதன் கூறியதாவது:
குப்பை மேலாண்மையே இல்லை
இங்கு குப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. முதல் தெருவில் மாசு ஏற்படும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால், மதுரை - தேனி ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சுத் திணறுகின்றனர்.
சுகாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என்றளவில்தான் ஊராட்சி நிர்வாகம் உள்ளது. பஸ் ஸ்டாப் அருகிலும், பதினோராவது தெரு துவக்கத்திலும் குப்பையை வீசிச் செல்வதால் மக்கள் மூக்கை பொத்தியபடி கடக்கின்றனர்.
இரண்டு முதல் 10வது தெரு வரை புதுப்பித்தபோது முதல் தெரு புறக்கணிக்கப்பட்டது. இதுபற்றி கேட்ட போது நிதி தீர்ந்ததாக அதிகாரிகள் கைவிரித்தனர். கனரக வாகனங்கள் இவ்வழியை பயன்படுத்துவதால் ரோடு பழுதடைந்து விட்டது. அனைத்து தெருக்களிலும் குறைந்த மின்அழுத்தத்தால் மின்சாதனங்கள் பழுதாகின்றன.
ஊராட்சி அலுவலகம்முன்பு குடிநீர் சுத்திகரிப்பு கருவி பலமாதங்களாக செயல்படவில்லை. இதனால்குடிநீரை பணம் கொடுத்து வாங்குகின்றனர்.
முதல் 7 தெருக்களுக்கும் ஆழ்துளை கிணறு மூலம் உப்புநீரே வினியோகமாகிறது. அதுவும் வாரத்தில் இருமுறைகூட வழங்குவதில்லை.
ஆக்கிரமிப்பு அட்டகாசம்
சங்க செலவில் கட்டிய நிழற்குடையைச் சுற்றி கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளது. அருகில் உள்ள மதுபானக் கூடத்தில் குடிப்பவர்களால் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. பஸ் ஸ்டாப் அருகே வாகனங்களால் ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
7வது தெருவில் விளக்குகள் இல்லாததால்இரவு நேரம் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். 9,10,11 தெருவிளக்குகளின் சுவிட்சுகள் திருவேணி நகரில் உள்ளது.அதனை பராமரிக்க ஊழியர்கள் தேவை. சி.சி.டி.வி., கேமரா இல்லாததால் அடிக்கடி திருட்டு நடக்கிறது. போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.