/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு அலுவலகங்களில் மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு : கோர்ட்டில் தகவல் உயர்நீதிமன்றத்தில் தகவல்
/
அரசு அலுவலகங்களில் மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு : கோர்ட்டில் தகவல் உயர்நீதிமன்றத்தில் தகவல்
அரசு அலுவலகங்களில் மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு : கோர்ட்டில் தகவல் உயர்நீதிமன்றத்தில் தகவல்
அரசு அலுவலகங்களில் மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு : கோர்ட்டில் தகவல் உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : ஜூன் 26, 2025 01:58 AM
மதுரை: தமிழகத்தில் சேவை அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவர தாக்கலான வழக்கில்,'அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்களின் மீது ஒரு மாதத்திற்குள் குறைகளுக்கு தீர்வு காண அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பு தெரிவித்தது.
மதுரை வழக்கறிஞர் மணவாளன் தாக்கல் செய்த பொதுநல மனு:
சேவை பெறும் உரிமைச் சட்டம் ம.பி.,பீஹார், டில்லி, பஞ்சாப், கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ளன. இச்சட்டப்படி மாநில அரசு அளிக்கும் சேவைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மக்கள் பெற முடியும். சேவையை வழங்கத் தவறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகுக்கிறது.இச்சட்டத்தின் கீழ் கர்நாடகாவில் 'சகாலா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சேவை பெற விண்ணப்பிக்கும் மக்கள், மனுவின் நிலையை இணையதளம் மூலம் அறிய முடியும். உரிய காலத்தில் சேவை அல்லது பதில் அளிக்கத் தவறும் அலுவலர்களுக்கு ரூ.20 முதல் ரூ.500வரை அபராதம் விதிக்கப்படும். விண்ணப்பம் அடிப்படையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மனுதாரர்களின் அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்.,அனுப்பப்படும்.
தமிழக அரசுத்துறைகளிடமிருந்து சேவைகளை மக்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இது லஞ்சம், முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது. தமிழகத்தில் சேவை அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவந்தால் பிறப்பு, இறப்புச் சான்று, வருமானச் சான்று, ரேஷன் கார்டு, பட்டா, மின் இணைப்பு பெறுவது உட்பட பல்வேறு சேவைகளை உரிய காலத்தில் மக்கள் பெற முடியும். சேவை அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவர தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் இ-மெயில் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு 3 நாட்களில் ஒப்புகைச் சான்று வழங்க வேண்டும். மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும். இதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என தலைமைச் செயலர் ஜூன் 4 ல் அரசாணை பிறப்பித்துள்ளார். இவ்வாறு கூறி அரசாணையை தாக்கல் செய்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை பைசல் செய்தனர்.