/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு 48 கிராமங்களில் தீர்மானம்
/
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு 48 கிராமங்களில் தீர்மானம்
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு 48 கிராமங்களில் தீர்மானம்
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு 48 கிராமங்களில் தீர்மானம்
ADDED : நவ 29, 2024 05:58 AM

மேலுார்: அ.வல்லாளபட்டியில் நேற்று 48 கிராமங்களை சேர்ந்த மக்கள் டங்ஸ்டன் திட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.
அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள 11 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் வெட்டி எடுக்க ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று அ.வல்லாளபட்டியில் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், விவசாயசங்க நிர்வாகிகள் ரவி குறிஞ்சிகுமரன் மற்றும் 48 கிராமங்களை சேர்ந்தவர்கள் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். தீர்மானமும் நிறைவேற்றினர்.
எம்.பி., க்கள் பார்லிமென்ட்டில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என்றனர்.