ADDED : நவ 12, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறநிலையத்துறை சார்பில் 70 வயதிற்கு மேற்பட்ட 12 மூத்த தம்பதியினருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தலைமை வகித்து அரசு அறிவித்த ரூ.2500 மதிப்பிலான பொருட்களுடன், தனது சார்பில் தலா ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வழங்கினார். சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மதிய உணவும் வழங்கப்பட்டது. மூத்த தம்பதியினருக்கு தி.மு.க., வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி சார்பில் தலா ரூ.2000 வழங்கப்பட்டது.

