ADDED : அக் 03, 2025 01:33 AM
திருப்பரங்குன்றம் : காந்தி ஜெயந்தி நாளான நேற்று அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருநகரில் காமராஜ் மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய அலுவலக வளாகத்தில் காந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் மாலை அணிவித்தனர். முதன்மைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட பொருளாளர் உதயகுமார், மாநில இளைஞரணி செயலாளர் அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்ற விழாவில், தலைவர் அய்யல்ராஜ் மாலை அணிவித்தார். பொருளாளர் அண்ணாமலை, துணைத் தலைவர் காளிதாசன், நிர்வாகிகள் வேட்டையார், சங்கரய்யா, துர்காராம், அரவிந்தன், செல்வரங்கராஜ், பாஸ்கர்பாண்டி, மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ் பங்கேற்றனர்.
திருநகர் மக்கள் மன்ற விழாவில் துணைத் தலைவர் பொன் மனோகரன் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் பால்பாண்டி பிச்சுமணி ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைவர் செல்லா தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி பேராசிரியர் மூவேந்தன் பேசுகையில், இளைஞர்கள் காந்தியின் வழியைப் பின்பற்றி நேர்மையின் பக்கம் எப்போதும் நிற்க வேண்டும் என்றார். நிர்வாக குழு உறுப்பினர் சங்கமம் பா. ராஜேந்திரன் வரவேற்றார். உறுப்பினர்கள் புள்ளி குமார், பால்பாண்டி, பிச்சுமணி, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஜெயன்ட்ஸ் குரூப் உதவித்தலைவர் ரங்கராஜ், திருநகர் அனைத்து வியாபாரிகள் நலச் சங்க செயற்குழு உறுப்பினர் குணசேகரன், நடைப் பயிற்சி நண்பர்கள் குழு நிர்வாகி சிவக்குமார், ஓய்வு டி.எஸ்.பி., மரகதசுந்தரம், தமிழ்நாடு கல்லுாரி அலுவலர் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம், நடைப்பயிற்சி நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மன்ற தலைவர் செல்லா, இணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, உறுப்பினர்கள் மாணிக்கராஜ், மணிகண்டன் செய்தனர். நிர்வாக குழு உறுப்பினர் பாக்கியம் நன்றி கூறினார்.
திருமங்கலம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கிளையில் நடந்தவிழாவில், அவரது படத்திற்கு கிளைத் தலைவர் மகபூப் பாட்ஷா மாலை அணிவித்தார். நிர்வாகிகள் பழனிராஜ், ரகுநாதன், பாலகிருஷ்ணன், வெங்கட கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் ரகுநாதன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி பரவையில் நகர காங்., சார்பில் நடிகர் சிவாஜி கணேசன், காந்திஜி பிறந்தநாளையொட்டி அவரது முழு உருவ சிலைக்கு நகர தலைவர் கோபால் தலைமையில் மரியாதை செய்தனர். துணைத் தலைவர் விவேகானந்தன், நிர்வாகிகள் சிவஞானம்,சஞ்சய் காந்தி, ஆனந்த் பங்கேற்றனர். பரவை காந்தி மன்ற நிர்வாகி சுப்பையா மாலை அணிவித்தார்.