/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓய்வு டி.எஸ்.பி.,யின் அழுகிய உடல் மீட்பு
/
ஓய்வு டி.எஸ்.பி.,யின் அழுகிய உடல் மீட்பு
ADDED : ஏப் 09, 2025 05:10 AM

மதுரை : மதுரையில் தனியாக வசித்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி., துரைசிங்கத்தின் 65, உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
மதுரை ஊமச்சிக்குளத்தைச் சேர்ந்தவர் துரைசிங்கம். திருமணமான 6 ஆண்டுகளில் மனைவி இறந்த நிலையில், மகனை தனி ஆளாக வளர்த்து திருமணம் செய்து வைத்தார். மகன் சென்னையில் வசிக்கும் நிலையில் இவர் 2 ஆண்டாக ஊமச்சிக்குளத்தில் வசித்தார். இடையப்பட்டி போலீஸ் பயிற்சி பள்ளி டி.எஸ்.பி.,யாக இருந்து பணி ஓய்வு பெற்றவர்.
ஏப்.3 இரவு வீட்டில் இவர் இருப்பதை சிலர் பார்த்துள்ளனர். அதன்பிறகு வீடு உள்பக்கமாக பூட்டியே கிடந்த நிலையில் நேற்று காலை துர்நாற்றம் வீசியது. அருகில் வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கதவை உடைத்து பார்த்த போது படுக்கை அறையில் அழுகிய நிலையில் துரைசிங்கம் இறந்து கிடந்தார். சமையல் அறையில் காலி மதுபாட்டில்கள் இருந்தன. போதை காரணமாக விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

