ADDED : ஜூன் 29, 2025 12:27 AM
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் முகாம் நடந்தது.
கல்வி, கல்லுாரி, போக்குவரத்து விதிமுறைகள், மது, போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு, சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள், வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள், உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தனர்.
நிறைவு விழாவில் முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முன்னாள் தலைவர் ராஜகோபால், துணைத் தலைவர் ஜெயராமன், செயலாளர் ஸ்ரீதர், துணை செயலாளர் சுரேந்தர், பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். இயக்குனர் பிரபு வரவேற்றார்.
மதுரை காமராஜ் பல்கலை இணை பேராசிரியர் பாரி பரமேஸ்வரன் பேசினார். கல்லுாரி தேசிய தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விமலா ஒருங்கிணைத்தார். பேராசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.