ADDED : நவ 14, 2024 06:47 AM
மதுரை; தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் மதுரை மாவட்ட கிளையின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. உயர்கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் நிறைவேறாத கோரிக்கைகள் குறித்து பேசினர்.
பணிநிறைவு பெற்ற 15 பேர் இந்த இயக்கத்தில் இணைந்தனர். சங்க செயல்பாடுகள் குறித்து செயலாளர் பெரியதம்பி எடுத்துரைத்தார். பொருளாளர் பெருமாள் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் மனோகரன் நிலுவையில் உள்ள ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு கிடைப்பது குறித்து பேசினார்.
உயர்கல்வி துறைக்கு மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் தகுதிபெற்ற ஓய்வு பேராசிரியர்களுக்கு உயர்வூதியப் பட்டியலை விரைந்து அனுப்ப வேண்டும். கல்லுாரி நுாலகர்களை, அறிவுமைய உதவிப் பேராசிரியராகவும், அறிவுமைய இணைப் பேராசிரியர் ஆகவும் மாற்றி உத்தரவிட வேண்டும். மேலும் மாதாந்திர பொதுக்குழுக் கூட்ட நிகழ்வின் போது, முதியோர் இல்ல பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்க முடிவெடுத்தனர். பேராசிரியர்கள் ஜெகநாதன், சண்முகசுந்தரம், லட்சுமணன் ஏற்பாடு செய்திருந்தனர்.

