/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிபதிக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
/
நீதிபதிக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
ADDED : ஜூன் 05, 2025 01:32 AM
மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.இளங்கோவனுக்கு நேற்று பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது. அவரது பணிக்காலம் மற்றும் பிறப்பித்த முக்கிய தீர்ப்புகள் குறித்து பாராட்டி காணொலி மூலம் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பேசினார்.
நீதிபதி ஜி.இளங்கோவன் பேசுகையில்'' நீதிபதிகள் தங்கள் மனசாட்சியைத் தவிர யாருக்காகவும், எதற்காகவும் பயம் கொள்ளக்கூடாது. ஒரு நபரின் உணர்வைத் தொடும் ஒரே பணி இதுதான்'' என்றார். நிர்வாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் காணொலி மூலம் பங்கேற்றார்.
ஓய்வு பெறும் நாளில் சம்பந்தப்பட்ட நீதிபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இடம்பெற்று காலையில் வழக்குகளை விசாரிப்பார். மாலையில் அங்கு பிரிவு உபசார விழா நடைபெறுவது வழக்கம்.
நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி 2021ல் ஓய்வு பெற்றபோது முதன்முறையாக மதுரைக் கிளையில் விழா நடந்தது. 2023ல் நீதிபதி ஆர்.தாரணி ஓய்வு பெற்றபோது மதுரையில் விழா நடந்தது.