ADDED : அக் 31, 2026 08:29 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சரவணன் இன்று (அக்.,31) ஓய்வுபெற்றார்.
இந்நிலையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதால், அவரின் பணப்பலன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தற்காலிக பென்ஷன் மட்டும் வழங்கப்படவுள்ளது. அவர் மீதான துறைரீதியான விசாரணை முடிவிற்கு பிறகு பணப்பலன்கள் முடிவு செய்யப்படும். அவர் குற்றவாளி என நிரூபணமானால் பென்ஷனில் இருந்து பணத்தை பிடித்தம் செய்யவோ, பணப்பலனை ரத்து செய்யவோ அரசுக்கு அதிகாரம் உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
