UPDATED : அக் 31, 2026 08:29 PM
ADDED : அக் 31, 2026 08:24 PM
மதுரை: மதுரைக் கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாற்றுப் பாதை
* நவ. 1, 3, 10, 12, 15, 17, 19, 22, 24, 26, 29, டிச.1, 3, 6ல் குருவாயூர் – தாம்பரம் ரயில் (16128) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்கிறது.
* நவ. 2, 4, 11, 13, 16, 18, 20, 23, டிச. 4, 7ல், நாகர்கோவில் – கோவை ரயில் (16321) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்கிறது. செங்கோட்டை – மதுரை பாசஞ்சர் (56772), விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக மதுரை வருகிறது.
பகுதி ரத்து
* நவ.5, 12ல் மதுரை – ராமேஸ்வரம் (56711), ராமேஸ்வரம் – மதுரை (56714) ஆகிய ரயில்கள் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன.
* நவ.19, 20, 21, 25, 26, 27, 28ல் மதுரை – ராமேஸ்வரம் (56711), ராமேஸ்வரம் – மதுரை (56714) ஆகிய ரயில்கள் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன.
முழு ரத்து
* நவ.26, 27, 28, 29, 30ல் திருச்செந்துார் – திருநெல்வேலி (56004), திருநெல்வேலி – திருச்செந்துார் (56003) ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
