/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வருவாய்த்துறை ரத்ததானம் கலெக்டர் துவக்கி வைத்தார்
/
வருவாய்த்துறை ரத்ததானம் கலெக்டர் துவக்கி வைத்தார்
ADDED : ஜூலை 02, 2025 01:57 AM

மதுரை, : மதுரை மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த வருவாய்த்துறை தினத்தையொட்டி ரத்ததானத்தை கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் முருகையன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., அன்பழகன், அரசு மருத்துவமனை டீன் அருள்சுந்தரேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகைதீன், செல்வகுமார், பி.ஆர்.ஓ., சாலிதளபதி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கோபி, பொருளாளர் முத்துப்பாண்டி, நிர்வாகிகள் ராம்குமார், முருகானந்தம், மணிமேகலை, டான்சாக்ஸ் திட்ட மேலாளர் ஜெயபாண்டி பங்கேற்றனர்.
இதையொட்டி நடந்த ரத்ததான முகாமை துவக்கி வைத்து கலெக்டர் பேசுகையில், ''ஐநுாறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளது வருவாய்த்துறை. ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்க்கை முறையில் மாற்றம் தரும் சக்தி கொண்டது இத்துறை.
இத்துறை வழங்கும் சிறு உதவிகூட ஒவ்வொரு வீட்டிலும் விளக்கேற்ற உதவும். இத்துறையினர் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் உழைக்கின்றனர்'' என்றார்.