/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்று முதல் எஸ்.ஐ.ஆர்., பணிகள் புறக்கணிப்பு வருவாய்த்துறை ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு
/
இன்று முதல் எஸ்.ஐ.ஆர்., பணிகள் புறக்கணிப்பு வருவாய்த்துறை ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு
இன்று முதல் எஸ்.ஐ.ஆர்., பணிகள் புறக்கணிப்பு வருவாய்த்துறை ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு
இன்று முதல் எஸ்.ஐ.ஆர்., பணிகள் புறக்கணிப்பு வருவாய்த்துறை ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு
ADDED : நவ 18, 2025 05:57 AM
மதுரை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இன்று முதல் முழுமையாக புறக்கணிப்பதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் (பெரா), அங்கன்வாடி பணியாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை உரிய திட்டமிடல் இன்றியும், பயிற்சிகள் அளிக்கப்படாமல், அவசர கதியில் நடத்த நிர்ப்பந்திப்பதாக வருவாய்த்துறையினர் கருதுகின்றனர். இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் முருகையன் கூறியதாவது: பணிநெருக்கடி காரணமாக நேற்று மாலை கலெக்டர்கள் அலுவலகங்களில் 'பெரா' சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அடுத்து இன்று (நவ.18) முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அனைத்தையும் புறக்கணிக்கிறோம். இதில் கிராம உதவியாளர்கள் முதல் தாசில்தார் வரை அனைத்து நிலை அலுவலர்களும் முழுமையாக ஈடுபடுவர்.
இவர்கள் தவிர ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் (பி.எல்.ஓ.,) பணிகளை மேற்கொள்ளும் சத்துணவு, அங்கன்வாடி, நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள், கணகாணிப்பாளர் பணி மேற்கொள்ளும் அனைத்துத்துறை அலுவலர் சங்கங்களும் ஈடுபடுவர்.
கோரிக்கைகள் என்ன எஸ்.ஐ.ஆர்., பணிக்கு அவகாசம் வழங்க வேண்டும். கூடுதல் பணியாளர் நியமனம், பி.எல்.ஓ., உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். கூடுதல் பணிப்பளுவால் ஒரு மாத ஊதியத்தை 'மதிப்பூதியமாக' வழங்க வேண்டும். தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் இதில் தலையிட்டு சுமுகச் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் செல்லதுரை, பொதுச் செயலாளர் ஜெசி கூறியிருப்பதாவது: நவ.16ல் நடந்த காணொலி காட்சி வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி இன்று (நவ.18) முதல் எஸ்.ஐ.ஆர்., பணிகளை புறக்கணிக்கிறோம் எனத்தெரிவித்துள்ளனர்.
அங்கன்வாடி ஊழியர்களும் புறக்கணிப்பு தமிழகத்தில் அங்கன்வாடி மையம், மினி மையங்கள் என 54 ஆயிரம் மையங்கள் செயல்படுகின்றன. 70 ஆயிரம் பேர் வரை பணிபுரிகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேரை தற்போது ஓட்டுச்சாவடி அலுவலராக நியமித்துள்ளனர். ஒரே அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அமைப்பாளர், உதவியாளர் ஆகிய இருவருக்கும் தேர்தல் பணி வழங்கியுள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணி பாதிக்கியது.
சங்க மாநில தலைவர் ஐ.பாக்கியமேரி கூறியதாவது:
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவம் வழங்குதல், பூர்த்தி செய்த படிவத்தை பெற்று, அவற்றை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகளை வழங்கியுள்ளனர்.
இப்பணிக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். பூர்த்தி செய்த படிவத்தை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணியை எங்களிடமிருந்து திரும்ப பெற வேண்டும். இது போன்ற கோரிக்கையை வலியுறுத்தி தான் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியை புறக்கணிக்க உள்ளோம் என்றார்.

