/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வருவாய்த்துறை கூட்டமைப்பினர் தர்ணா
/
வருவாய்த்துறை கூட்டமைப்பினர் தர்ணா
ADDED : ஜூன் 26, 2025 01:31 AM

மதுரை: மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கூட்டமைப்பினர் நேற்று ஒருநாள் விடுப்பு எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிபாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் இலக்குகளை நிர்ணயிப்பதற்கு தீர்வு கிடைக்க வேண்டும், காலியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை முன்பு போலவே 25 சதவீதமாக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்சங்களை வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக நேற்று வருவாய் அலுவலர்கள் 1110 பேர் விடுப்பு எடுத்தனர். உலகத்தமிழ்ச் சங்கம் முன்பிருந்து ஊர்வலமாக கிளம்பி, கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு தர்ணா போராட்டம் நடந்தது.
வருவாய்த்துறை அலுவலர் சங்க செயலாளர் முகைதீன் அப்துல்காதர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கோபி, கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் சுரேஷ், நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு தலைவர் ரகுபதி, கிராம உதவியாளர் சங்க செயலாளர் வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.
வருவாய்த்துறை கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் முருகையன், நிலஅளவை அலுவலர் ஒன்றிப்பு மாநில செயலாளர் முத்துமுனியாண்டி பேசினர். பொருளாளர் முத்துப்பாண்டியன் நன்றி கூறினார். வருவாய்த்துறையினர் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததால் பணிகள் முடங்கின.