ADDED : செப் 21, 2024 05:53 AM
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளை மதுரை நாடார் உறவின்முறை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி நடத்தியது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், பள்ளி உடற்கல்வி இயக்குனர் தங்கபாண்டியன் பங்கேற்றனர்.
மகளிர் போட்டி முடிவுகள்
மகளிர் 14 வயது ஒற்றையர் பிரிவில் லீ சாட்லியர் பள்ளி முதலிடம்,ஸ்ரீ சாரதா வித்யாவனம் 2ம் இடம், சி.எஸ்.ஐ. பள்ளி 3ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் ஸ்ரீ சாரதா வித்யாவனம் முதலிடம், செவன்த்டே பள்ளி 2ம் இடம், ஸ்ரீ அரபிந்தோ மீரா பள்ளி 3ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் டி.வி.எஸ். பள்ளி முதலிடம், மதுரை அருப்புக்கோட்டை நாடார் பள்ளி 2ம் இடம், வெள்ளி வீதியார் மாநகராட்சி பள்ளி 3ம் இடம் பெற்றன.
14 வயது இரட்டையர் பிரிவில் சி.இ.ஓ.ஏ., பள்ளி முதலிடம், ஸ்ரீ சாரதா வித்யாவனம் 2ம் இடம், பாரதியார் பள்ளி 3ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் ஸ்ரீ சாரதா வித்யாவனம் முதலிடம், டி.வி.எஸ். பள்ளி 2ம் இடம், மதுரை கிரசன்ட் பள்ளி 3ம் இடம்பெற்றன.19 வயது பிரிவில் சி.இ.ஓ.ஏ. பள்ளி முதலிடம், டி.வி.எஸ். பள்ளி 2ம் இடம், வெள்ளி வீதியார் மாநகராட்சி பள்ளி 3ம் இடம் பெற்றன.
ஆடவர் போட்டி முடிவுகள்
14 வயது ஒற்றையர்பிரிவில் சி.இ.ஓ.ஏ. பள்ளி முதலிடம், திருநகர் இந்திராகாந்தி பள்ளி 2ம் இடம், ராஜன் பள்ளி 3ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் இ.பி.ஜி. மெட்ரிக் பள்ளி, ராஜன் மெட்ரிக், சி.இ.ஓ.ஏ., பள்ளி, 19 வயது பிரிவில் சிவகாசி நாடார் பள்ளி, செயின்ட் மேரீஸ் பள்ளி, சி.இ.ஓ.ஏ., பள்ளிகள் முதல் மூன்று இடங்களைப் பெற்றன.
14 வயது இரட்டையர்பிரிவில் சி.இ.ஓ.ஏ. பள்ளி முதலிடம், அருள் மலர் பள்ளி 2ம் இடம், இந்திராகாந்தி பள்ளி 3ம் இடம், 17 வயது பிரிவில் இ.பி.ஜி., பள்ளி முதலிடம், ராஜன் பள்ளி 2ம் இடம், சி.இ.ஓ.ஏ. பள்ளி 3ம் இடம், 19 வயது பிரிவில் செயின்ட் மேரீஸ் பள்ளி முதலிடம், சி.இ.ஓ.ஏ., பள்ளி 2ம் இடம், சிவகாசி நாடார் பள்ளி 3ம் இடம் பெற்றன.