/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வருவாய் மாவட்ட எறிபந்து, கபடி போட்டி
/
வருவாய் மாவட்ட எறிபந்து, கபடி போட்டி
ADDED : அக் 12, 2024 04:54 AM
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான எறிபந்து போட்டிகளை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளி நடத்தியது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத், தலைமையாசிரியர் ரமேஷ் போட்டிகளை துவக்கி வைத்தனர். உடற்கல்வி இயக்குநர் தங்கபாண்டி, உடற்கல்வி ஆசிரியர்கள் மாரிக்கண்ணன், சிவா, பிரபுராஜா, ஒருங்கிணைத்தனர்.
ஆடவர் 14 வயது பிரிவில் சி.இ.ஓ.ஏ. பள்ளி முதலிடம், எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளி 2ம் இடம், திருமங்கலம் பி.கே.என்., பள்ளி 3ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் சி.இ.ஓ.ஏ., முதலிடம், ஜெயராஜ் நாடார் பள்ளி 2ம் இடம், எழுமலை பாரதியார் பள்ளி 3ம் இடம், 19 வயது பிரிவில் ஜெயராஜ் நாடார் பள்ளி முதலிடம், பாரதியார் பள்ளி 2ம் இடம், மதுரைக்கல்லுாரி பள்ளி 3ம் இடம் பெற்றன.
மகளிர் பிரிவு
14 வயது, 19 வயது மகளிர் பிரிவு எறிபந்து போட்டியில் அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் பள்ளி முதலிடம், செயின்ட் ஆன்டனி பள்ளி 2ம் இடம் பெற்றன. 14 வயது பிரிவில் கல்யாணி பள்ளி,19 வயது பிரிவில் மேலுார் சைதை துரைசாமி பள்ளி 3ம் இடம் பெற்றன.
மகளிருக்கான 17 வயது பிரிவு கபடி போட்டியில் நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி பள்ளி முதலிடம், டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி 2ம் இடம், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி 3ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி முதலிடம், உறங்கான்பட்டி அரசுப் பள்ளி 2ம் இடம், செயின்ட் ஆன்டனி பள்ளி 3ம் இடம் பெற்றன.