/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருநகரில் 13 ஆண்டுகளாக பாழாகி போன வணிக வளாகம் சீரமைத்தால் மாநகராட்சிக்கு வருவாய்

ADDED : பிப் 08, 2024 05:07 AM

திருநகர், : மதுரை திருநகரில் 13 ஆண்டுகளாக பயன்பாடின்றி இறைச்சி வணிக வளாகம் பாழாகி வருகிறது. சீரமைத்து செயல்பட வைத்தால் மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும்.
திருநகர் பேரூராட்சியாக இருந்தபோது முதலாவது பஸ் ஸ்டாப் அருகே 2009ல் இறைச்சி வணிக வளாகம் கட்டப்பட்டது. ஓராண்டு வரை சிலர் அங்கு இறைச்சி வியாபாரம் செய்தனர். அதன் பின்பு அவ்வளாகம் செயல்பாடின்றி பாழடைந்து கிடக்கிறது. தற்போது இரண்டு கடைகள் மட்டுமே செயல்படுகிறது.
இந்த வளாகத்தின் பின்புறம் ஐந்து கடைகளும் பூட்டியே கிடக்கிறது. திருநகர் பகுதிகளில் மெயின் ரோடு, தெருக்களில் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே இறைச்சி கடைகள் உள்ளன. பாழ்பட்டு வரும் வணிக வளாகத்தை சீரமைத்து அனைத்து இறைச்சி கடைகளையும் அங்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் மாநகராட்சிக்கு வருமானம் கிடைப்பதுடன், குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரம் மேம்படும்.