/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போராடுவதைத் தவிர வேறு வழியில்லை; வருவாய்த்துறை அலுவலர்கள் விரக்தி
/
போராடுவதைத் தவிர வேறு வழியில்லை; வருவாய்த்துறை அலுவலர்கள் விரக்தி
போராடுவதைத் தவிர வேறு வழியில்லை; வருவாய்த்துறை அலுவலர்கள் விரக்தி
போராடுவதைத் தவிர வேறு வழியில்லை; வருவாய்த்துறை அலுவலர்கள் விரக்தி
ADDED : ஜன 13, 2025 03:55 AM
மதுரை : ''பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாவிடில் வலிமையாக போராடுவதைத் தவிர வேறு வழியில்லை'' என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாநில தலைவர் முருகையன், பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
தமிழகத்தில் முந்தைய ஆட்சிகாலத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாமல், வல்லுனர் குழு, அறிக்கை, பரிசீலனை என காலம் தாழ்த்தி வந்தனர்.
அரசு ஊழியர், ஆசிரியர்களின் போராட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவராக பங்கேற்று, எங்கள் ஆட்சியில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்து, நான்காண்டுகள் முடிவடையும் நிலையிலும் நடவடிக்கை இல்லாததால், அனைவரும் அதிருப்தியில் உள்ளனர்.
சட்டசபையில் நிதிஅமைச்சர், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும் என்றும், அதன்பின் தகுந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த புதிய குழுவை அமைப்போம் எனவும் தெரிவித்தது வேதனை அளிப்பதோடு, அரசின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதாக உள்ளது.
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் ஒப்பந்தம் செய்த பல மாநிலங்களே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. இதில் ஒப்பந்தம் செய்யாத தமிழகம் மத்திய அரசை காரணம் காட்டி தாமதம் செய்யாமல், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்தும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் குறித்தும் சட்டசபை கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும்.
இல்லையெனில் வலிமையான போராட்டங்களை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனத்தெரிவித்துள்ளனர்.