sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வி.ஏ.ஓ.,க்களுக்கான பதவி உயர்வில் பாரபட்சம் முதல்வர் கவனிக்க வருவாய் அலுவலர்கள் வலியுறுத்தல்

/

வி.ஏ.ஓ.,க்களுக்கான பதவி உயர்வில் பாரபட்சம் முதல்வர் கவனிக்க வருவாய் அலுவலர்கள் வலியுறுத்தல்

வி.ஏ.ஓ.,க்களுக்கான பதவி உயர்வில் பாரபட்சம் முதல்வர் கவனிக்க வருவாய் அலுவலர்கள் வலியுறுத்தல்

வி.ஏ.ஓ.,க்களுக்கான பதவி உயர்வில் பாரபட்சம் முதல்வர் கவனிக்க வருவாய் அலுவலர்கள் வலியுறுத்தல்


ADDED : அக் 30, 2025 04:07 AM

Google News

ADDED : அக் 30, 2025 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஒரே கல்வித் தகுதியில் பணி நியமனம் பெறும் கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,), இளநிலை உதவியாளர், தட்டச்சர்களிடையே பதவி உயர்வு வழங்குவதில் உள்ள இடையூறுகளை களைந்திடும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என பதவி உயர்வு வருவாய் அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வருவாய்த் துறையில் வி.ஏ.ஓ.,க்கள், டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர் ஆகிய 3 பணியிடங்களும் ஒரே கல்வித்தகுதியில் நியமனமாகின்றனர். ஆனால் பதவி உயர்வின்போது மற்ற 2 தரப்பினரைப் போல வி.ஏ.ஓ.,க்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ளதால், பதவி உயர்வு மிகமிக தாமதமாகவே வருகிறது. இதனால் வி.ஏ.ஓ.,க்கள் அதில் ஆர்வம் காட்டாமல் வி.ஏ.ஓ.,யாகவே ஓய்வு பெறுகின்றனர்.

பதவி உயர்வில் பாரபட்சம் இதனை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இதன் மாநில பொதுச் செயலாளர் ஜெயகணேஷ் கூறியதாவது:

வருவாய்த்துறையில் வி.ஏ.ஓ.,வைவிட குறைந்த கல்வித்தகுதி, ஊதியத்தில் நியமனம் பெறும் அலுவலக உதவியாளர்களில் பலர் தாசில்தாராக, பதிவுறு எழுத்தர்களில் பலர் துணை கலெக்டர் அளவுக்கும் பதவி உயர்வில் செல்கின்றனர். ஆனால் வி.ஏ.ஓ.,க்களுக்கு தாசில்தார் பதவி கூட கானல் நீராகவே உள்ளது. இத்துறையை வருவாய் நிர்வாகம், கிராம நிர்வாகம் என பிரித்தாளுவதால் ஒரே கல்வித் தகுதி இருந்தும், 12,621 வி.ஏ.ஓ.,க்களின் பதவி உயர்வு வாய்ப்பை, 2229 இளநிலை உதவியாளர், 1173 தட்டச்சர்கள், 138 சுருக்கெழுத்தர்கள் என 3540 பேர் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என வருவாய்த்துறையின் சில சங்கங்களின் அழுத்தத்தால் உயரதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர்.

வி.ஏ.ஓ.,க்களுக்கு 6 ஆண்டு பணிக்காலம் முடித்திருக்க வேண்டும், 30 சதவீத விகிதாசாரத்துடன் மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என கடைபிடிக்கின்றனர். இரு அரசு கடிதங்களை காரணம்காட்டி, வி.ஏ.ஓ.,க்களை இளநிலை உதவியாளர், தட்டச்சர்களுக்கு பின்னால் வைத்து பட்டியலிடுகின்றனர். இதனால் இன்றைய தலைமுறை வி.ஏ.ஓ.,வினர் பதவி உயர்வை பெற தயக்கம் காட்டுகின்றனர். பதவி உயர்வு பெற்றவர்கள்கூட மீண்டும் வி.ஏ.ஓ.,வாக திரும்பும் நிலையும் உள்ளது.

தவிர்க்கும் வழி இதோ இந்நிலையை தவிர்க்க, வருவாய்த்துறையில் அடிப்படை பணியாக வி.ஏ.ஓ.,க்களை டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்து 2 ஆண்டுகள் கழித்து விருப்ப அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணிமாற்றம் செய்து, பின்னர் அடுத்த பதவி உயர்வை வழங்க வேண்டும்.

டைப்பிஸ்டுகளுக்கு மட்டும் 2 ஆண்டுகள் வி.ஏ.ஓ., பயிற்சி வழங்க வேண்டும். உதவியாளர் நிலையில் 2 ஆண்டுகள் பிர்காவில் வருவாய் ஆய்வாளராக பயிற்சி வழங்குவதை ரத்து செய்து, அதற்கு பதிலாக பிர்கா துணைத் தாசில்தார் என பணியிடம் வழங்கலாம். அவர்கள் மூலம் வருவாய்த்துறை சான்றுகளை எளிதாக வழங்கலாம் என்பதால் தாலுகாவிலும் பணிகள் எளிதாகும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us