ADDED : டிச 14, 2024 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்வதால் விளை நிலங்களில் நீர் புகுந்துள்ளது.
இதனால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைகின்றன. ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்கள் தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கி சாய்ந்துள்ளன.
சந்தையூரில் அறுவடைக்கு தயாரான நெற் பயிர் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது.
நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நடப்பட்டுள்ள சின்ன வெங்காய பயிர்கள் நீரில் மூழ்கி அழுகத் துவங்கியுள்ளன.
ஓடைகளை துார்வாராததால் மழைநீர் செல்ல வழியின்றி விளை நிலங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது.
அது பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். பயிர்கள் சேதமாகி உள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர்.