ADDED : ஜூலை 31, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :  மதுரை விவசாய கல்லுாரி உழவியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு தேவையான ஆதாரநிலை, சான்றளிக்கப்பட்ட நெல் விதைகள் விற்பனைக்கு உள்ளன.
ஆதார நிலை 1ல் ஆடுதுறை 54, கோ 55 ரகம், ஆதார நிலை 2ல் ஆடுதுறை 54 ரக நெல் விலை கிலோ ரூ.44. சான்றளிக்கப்பட்ட ஆடுதுறை 58 ரக நெல் விதை கிலோ ரூ.38. விதைகள் 30 கிலோ பையாக விற்கப்படு கிறது.
பார்சலாகவும் அனுப்பப்படும் என உழவியல் துறைத்தலைவர் ராகவன் தெரிவித்துள்ளார். அலைபேசி: 94420 54780.

