/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தடுப்புச்சுவர் இல்லாத கழிவுநீர் கால்வாயால் விபத்து அபாயம்
/
தடுப்புச்சுவர் இல்லாத கழிவுநீர் கால்வாயால் விபத்து அபாயம்
தடுப்புச்சுவர் இல்லாத கழிவுநீர் கால்வாயால் விபத்து அபாயம்
தடுப்புச்சுவர் இல்லாத கழிவுநீர் கால்வாயால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 29, 2025 01:25 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் தடுப்புச் சுவர் இல்லாத கழிவுநீர் கால்வாயால் விபத்து அபாயம் உள்ளது.
இப்பேரூராட்சியில் முனியாண்டி கோயில் எதிரே கேட் கடை மெயின் ரோட்டில் சாலை விரிவாக்க பணி நடந்தது. அப்போது இங்கிருந்த குறுகிய கழிவுநீர் வடிகால் பாலத்தை அகற்றி நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய பாலம் கட்டப்பட்டது.
இப்பகுதியில் உரிய திட்டமிடல் இன்றி பாலப் பணிகள் வடிகால் பழைய கட்டடத்துடன் இணைக்கப்பட்டவில்லை. சாலையோரம் தடுப்புகள் இன்றி வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகள், கழிவுநீர் தேங்கி சுகாதாரம் பாதிக்கிறது. சந்தை நாட்களில் இக்கழிவுகளுடன் காய்கறி கடைகள் வைத்து விற்பனை நடக்கிறது. கூட்ட நெரிசலில் தடுப்பு இல்லாத இந்த வடிகாலில் தடுமாறி சிலர் விழுந்து காயமடைந்துள்ளனர். இக்கால்வாயை உரிய முறையில் சீரமைத்து தடுப்பு அமைக்க நெடுஞ்சாலை, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.