/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எதிர்திசை வாகனங்களால் விபத்தில் சிக்கும் அபாயம்
/
எதிர்திசை வாகனங்களால் விபத்தில் சிக்கும் அபாயம்
ADDED : பிப் 17, 2025 05:33 AM
மதுரை : மதுரை பாண்டிகோயில் ரிங்ரோடு பகுதியில் வாகனங்கள் எதிர்த்திசையில் செல்வதால் விபத்து அபாயம் அதிகமுள்ளது.
மதுரை மேலுார் ரோட்டில் உத்தங்குடி - மீனாட்சி மிஷன் மருத்துவமனை இடையே கப்பலுார் செல்லும் ரிங்ரோடு துவங்குகிறது. இந்த ரோடு தற்போது 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ரோட்டின் இலந்தைக் குளம் டைடல் பார்க், பாண்டி கோயில் பகுதியில் உள்ளவர்கள் மாட்டுத்தாவணி, உத்தங்குடி பகுதிக்கு செல்ல ரோட்டின் மேற்கு பகுதிக்கு வரவேண்டும்.
அவ்வாறு செல்ல ரோட்டில் மீடியனில் இடைவெளி இல்லை. இதனால் பல வாகனங்கள் எதிர்த்திசையில் மாட்டுத்தாவணிக்கு செல்கின்றன. நீண்ட துாரத்தில் குரு மருத்துவமனை அருகே உள்ள இடைவெளி வழியாக ரோட்டின் மேற்கு பகுதிக்கு 'டிராக்' மாறி செல்கின்றன. அதுவரை ஆபத்தான முறையில், விரையும் வாகனங்களை எதிர்கொண்டு செல்வதால் விபத்து அபாயம் அதிகமுள்ளது.
அவ்வாறு டிராக் மாறும் இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் அவர்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனர். இலந்தைக்குளம் டைடல் பார்க் பகுதியில் டிராக் மாறும் வகையில் மீடியனில் இடைவெளி இல்லை. பாண்டிகோயில் அருகே இருந்த இடைவெளியை விபத்து தடுப்புக்காக அடைத்துவிட்டனர். இதனால் எதிர்த்திசையில் செல்வோர் அதிகரித்துள்ளனர். இந்த விதிமீறிய பயணத்தை தவிர்க்க டைடல் பார்க் பகுதியில் மீடியனில் இடைவெளி தேவை என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

