ADDED : மே 29, 2026 04:54 AM
அ நிறம் | அளவு
மதுரை: மத்திய, மாநில அரசுகள் நதிநீர் இணைப்பை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மதுரையில் நடந்த சர்வதேச உரிமைகள் கழக உயர்மட்ட குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்திற்கு நிறுவன தலைவர் சுரேஷ்கண்ணன் தலைமைவகித்தார். தலைவர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் சிவஞானம் வரவேற்றார்.
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும். மருத்துவமனை அமைக்க இடம் தந்தவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் பொறுப்பேற்ற புதியஅரசு நான்கரை லட்சம் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் சிவா நன்றி கூறினார்.
