தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இரவில் ரோடு மறியல்

இரவில் ரோடு மறியல்

இரவில் ரோடு மறியல்


ADDED : மே 23, 2025 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2025 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: கள்ளிக்குடி சின்ன உலகாணியை சேர்ந்தவர் பால்பாண்டி 45. இவர் நிலம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்து தலைமறைவானார். இவரது உறவினர் உன்னிப்பட்டி முத்துப்பேச்சி 35. பால்பாண்டி வீட்டின் மாடியில் வசிக்கிறார். இவரும் பால்பாண்டியிடம் பணம் கொடுத்து ஏமாந்தார். போலீசில் புகார் செய்த நிலையில் பால்பாண்டி மனைவி பூமாரி, 'எங்கள் வீட்டில் இருந்து கொண்டே எங்கள் மீதே புகார் செய்கிறாயா. உடனே வீட்டை காலி செய்' எனக்கூறி தகராறில் ஈடுபட்டதோடு விஷம் குடித்து மயங்கினார். பயந்துபோன முத்துப்பேச்சியும் விஷம் குடித்தார்.

இருவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையறிந்த கிராமத்தினர் மருத்துவமனையில் திரண்டனர். பின்பு தாலுகா அலுவலகம் முன்பு நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர். இந்த ரோட்டில் 35 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us