UPDATED : ஏப் 29, 2026 09:58 PM
ADDED : ஏப் 29, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: கச்சைகட்டி ஊராட்சி பெரியார் நகரில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி வீடு மற்றும் தெரு குழாய்களில் சில வாரங்களாக குடிநீர் வினியோகம் சீராக இல்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் ஏப்ரல் 29 காலை அப்பகுதியினர் வாடிப்பட்டி ரோட்டில் குறுக்கே கயிறை கட்டியும், காலி குடங்களுடன் அமர்ந்தும் மறியல் செய்தனர். ஒன்றிய அதிகாரிகள், வாடிப்பட்டி போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திதனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் காலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
