ADDED : மே 26, 2025 02:20 AM
திருமங்கலம்,: திருமங்கலம் கண்டு குளம் கிராமத்தில் குடிநீர் கேட்டு நேற்று காலை காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி ரோட்டில் உள்ள கண்டு குளம் கிராமம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சில நாட்களாக குடிநீர் வினியோகம் நடக்கவில்லை. சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதன்பின்னும் தண்ணீர் வினியோகம் முறைப்படுத்தப்படவில்லை.
இதனால் நேற்று காலை திருமங்கலம் - உசிலம்பட்டி ரோட்டில் பஸ் ஸ்டாப் அருகே பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் விரைவில் தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. உசிலம்பட்டி ரோட்டில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.