ADDED : ஆக 13, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி; உத்தப்பநாயக்கனுார் அருகே கன்னிமார்புரம் கிராமத்திற்கான மயானத்திற்குச் செல்லும் வழியில் தனிநபர்களின் பட்டா நிலம் உள்ளது. இதன் வழியாக சடலங்களை எடுத்துச் செல்ல எதிர்ப்புள்ள நிலையில் நேற்று தங்கராஜ் 55, என்பவர்இறந்தார். உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல பட்டா நிலத்தின் வழியே அனுமதிக்காததை கண்டித்து உசிலம்பட்டி- - வத்தலக்குண்டு ரோட்டில் நேற்று மாலை 5:15 மணி முதல் 5:45 மணி வரை சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி தாசில்தார் பாலகிருஷ்ணன், டி.எஸ்.பி., சந்திரசேகரன், தி.மு.க., வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி உள்ளிட்டோர் சமரசம் செய்தபின் கலைந்து சென்றனர்.