நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், : திருமங்கலம் அருகே கண்டுகுளத்தில் பாண்டி என்பவர் மாட்டு இறைச்சியை பதப்படுத்தி கேரளாவிற்கு அனுப்பும் தொழில் செய்கிறார்.
இதனால் கிராமம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், உடல்நலம் பாதிப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிகாரிகளிடம்கூறியும் நடவடிக்கை இல்லாததால் நேற்று கிராம மக்கள் உசிலம்பட்டி ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசத்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்.