UPDATED : அக் 21, 2026 05:41 PM
ADDED : அக் 21, 2026 05:37 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகே விவசாயிகள் சங்கம் சார்பில் ரோடு மறியல் நடந்தது.
மாவட்டத் தலைவர் வேல்பாண்டி தலைமை வகித்தார். துணைத்தலைவர் காளிதாஸ், மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு முன்னிலை வகித்தனர். வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குதல், இலவச மின்சாரத்தை பறிக்கும் ஸ்மார்ட்மீட்டர் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்டத் துணைத் தலைவர் முருகன், செயலாளர் முத்துராணி பங்கேற்றனர்.
