/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாலைப் பராமரிப்பு ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு
/
சாலைப் பராமரிப்பு ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு
சாலைப் பராமரிப்பு ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு
சாலைப் பராமரிப்பு ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு
ADDED : டிச 30, 2024 05:48 AM
மதுரை: 'ஊதியத்தில் பத்து சதவீத ஆபத்து படி வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலைப் பராமரிப்பு ஊழியர்கள் பல்வேறு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநில தலைவர் வைரவன் தலைமையில் நடந்தது.
மாவட்ட தலைவர் மாரி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார், வேலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் ஜெயராஜ ராஜேஸ்வரன் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் மணிகண்டன், சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், பரமேஸ்வரன் பேசினர்.
கூட்டத்தில் சாலைப் பராமரிப்பு ஊழியர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை கருத்தியலான ஊதியம், ஓய்வூதிய பணபலன்களுக்கு கணக்கிட வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதனை அமல்படுத்திட முதல்வர், நிதியமைச்சர், தலைமை செயலாளர் உள்ளிட்டோரிடம் பெருந்திரளாக முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
சாலைப் பணியாளர்களை 'அன்ஸ்கில்ட்' பணியிடமாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடுமையான, விபத்து நிறைந்த பணிகளை மேற்கொண்டு வரும் நிலையை கருத்தில் கொண்டு, ஊதியத்தில் 10 சதவீத ஆபத்துபடி வழங்க வேண்டும் எனத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.
நாளை (டிச.31) தமிழக முதல்வர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை அரசு செயலர் ஆகியோருக்கு தபால் அனுப்பும் இயக்கம் நடத்துவது, ஜன.23ல் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், பிப்ரவரியில் அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் சந்தித்து மனு வழங்குவது, சென்னை கிண்டியில் உள்ள தலைமை பொறியாளர் வளாகம் முன் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவெடுத்தனர்.
கடுமையான, விபத்து நிறைந்த பணிகளை மேற்கொண்டு வரும் நிலையை கருத்தில் கொண்டு, ஊதியத்தில் 10 சதவீத ஆபத்துபடி வழங்க வேண்டும்