/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பணிநீக்க காலத்தை ஊதிய உயர்வு ஓய்வூதியத்திற்கு கணக்கிட வேண்டும் சாலை பராமரிப்பு ஊழியர்கள் வலியுறுத்தல்
/
பணிநீக்க காலத்தை ஊதிய உயர்வு ஓய்வூதியத்திற்கு கணக்கிட வேண்டும் சாலை பராமரிப்பு ஊழியர்கள் வலியுறுத்தல்
பணிநீக்க காலத்தை ஊதிய உயர்வு ஓய்வூதியத்திற்கு கணக்கிட வேண்டும் சாலை பராமரிப்பு ஊழியர்கள் வலியுறுத்தல்
பணிநீக்க காலத்தை ஊதிய உயர்வு ஓய்வூதியத்திற்கு கணக்கிட வேண்டும் சாலை பராமரிப்பு ஊழியர்கள் வலியுறுத்தல்
ADDED : டிச 16, 2024 05:59 AM
மதுரை : ''41 மாத பணிநீக்க காலத்தை ஊதிய உயர்வு, ஓய்வூதிய பணபலனுக்கு கணக்கிட வேண்டும்'' என்று சாலை பராமரிப்பு ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் வைரவன், பொதுச் செயலாளர் விஜயகுமார் கூறியிருப்பதாவது: தமிழக நெடுஞ்சாலைத் துறையில் 1997ல் தி.மு.க., ஆட்சியின் போது 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பின் அ.தி.மு.க., ஆட்சியில் 2002 ல் இரவோடு இரவாக அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் வீதிகளில் பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் 2004 செப்.8 ல் பணிநீக்கம் செய்யப்பட்டோருக்கு பணிமுறிவின்றி மீண்டும் பணியில் அமர்த்த, 6 மாத ஊதியம் வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. பணியாளர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்ததால், மேல்முறையீடு திரும்பப் பெறப்பட்டதுடன், உடனே அவர்கள் பணிநியமனமும் செய்யப்பட்டு, பணிமுறிவும் இருக்காது எனவும் அரசாணை வழங்கப்பட்டது.
அதன்பின் மீண்டும் வந்த தி.மு.க., ஆட்சியில் அப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை ஊதியமில்லா அசாதாரண விடுப்பாக முறைப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது. இன்றைய முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக 41 மாத ஊதியம் வழங்கப்படும் என பேசியுள்ளார்.
இருந்தாலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, 2004ல் இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அரசாணை 133 ரத்து செய்யப்படுகிறது. 41 மாத பணிநீக்க காலத்தை ஊதிய உயர்வுக்கும், ஓய்வூதிய பணபலனுக்கும் கணக்கிட உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த கோரி வலியுறுத்தி வருகிறோம்.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சரோ, இதில் நிதிஅமைச்சர், செயலரே முடிவு வழங்க முடியும் என்கிறார். இதனை நிறைவேற்ற வலியுறுத்தி டிச.20 ல் சென்னை கிண்டியில் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் திரண்டு கோரிக்கை மனு வழங்க உள்ளோம் என்றனர்.