/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2025 04:48 AM

மதுரை: மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் (அன்ஸ்கில்டு) சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை கருத்தியலான ஊதியம், ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிட வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார்.
அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நுார்ஜஹான் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன் கோரிக்கை குறித்து விளக்கினார்.
அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாநில செயலாளர் சோலையன், சுகாதார போக்குவரத்து ஊழியர்கள் சங்க முன்னாள் மாநில தலைவர் நடராஜன் பேசினர். அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சின்னப்பொண்ணு, ஊர்தி ஓட்டுனர் சங்க மாநில தலைவர் வேல்முருகன், வணிகவரி பணியாளர் சங்க இணைச் செயலாளர் கல்யாணசுந்தரம், டான்சாக் மண்டல தலைவர் வீரவேல்பாண்டியன், சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். அரசு ஊழியர்கள் சங்க பொருளாளர் ரசிகண்ணன் நன்றி கூறினார்.

